அம்பானி பள்ளிக்கு வெடிகுண்டு மிரட்டல்!! பரபரக்கும் மும்பை!!

 
அம்பாய் சர்வதேச பள்ளி

மகாராஷ்டிராவில்  மும்பை பாந்த்ரா பகுதியில் ரிலையன்ஸ் குழுமத்தின் திருபாய் அம்பானி சர்வதேச பள்ளிக்கு மர்ம அழைப்பு வந்தது.இதில் பள்ளியில் வெடிகுண்டு வைக்கப்பட்டுள்ளதாக மிரட்டல் விடுக்கப்பட்டது. அந்த அழைப்பில்  ஒரு மர்ம நபர்  பள்ளியில் வெடிகுண்டு வைத்திருப்பதாக கூறியதும்  உடனே அழைப்பைத் துண்டித்தார்.

மர்ம அழைப்பு

சம்பவ இடத்திற்கு உடனடியாக  விரைந்து வந்த காவல்துறை  பள்ளி வளாகம் முழுவதும் சோதனை செய்தது. இதில் வெடிகுண்டு எதுவும் சிக்கவில்லை. இச்சம்பவம் குறித்து காவல்துறையில்  பள்ளி நிர்வாகம் அளித்த புகாரின் அடிப்படையில் வழக்கு பதிவு செய்து விசாரணை தொடங்கப்பட்டுள்ளது.

போலீஸ்

இந்நிலையில் வெடிகுண்டு மிரட்டல் அழைப்பு விடுத்தவரை கண்டுபிடித்துள்ளதாகவும் விரைவில் குற்றவாளியை கைது செய்யப்படுவார் எனவும் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
 அக்டோபரில் ரிலையன்ஸ் மருத்துவமனையை வெடிகுண்டு வைத்து தகர்க்கப் போவதாகவும், அம்பானி குடும்பத்தினரை கொலை செய்யப் போவதாகவும் தொலைபேசியில் மிரட்டல் விடுக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

மார்கழி மாத விரத முறைகள், வழிபாடு, பலன்கள்!

அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

சபரிமலை போறீங்களா?! 60 நாட்களுக்கு உணவு, தங்குமிடம் எல்லாமே இங்கே ஃப்ரீ தான்!!

From around the web