ஜனவரி 6 முதல் புத்தகக் கண்காட்சி !! முதல்வர் தொடங்கி வைப்பு!!

 
புத்தகக் கண்காட்சி

தமிழகத்தின் தலைநகரமாம் சென்னையில்  ஒவ்வொரு வருடமும் ஜனவரியில் புத்தகக் கண்காட்சி பிரம்மாண்டமாக நடத்தப்படுவது வழக்கமாக இருந்து வருகிறது. அந்த வகையில் நடப்பாண்டில் 46 வது சென்னை சர்வதேச புத்தக கண்காட்சி  ஜனவரி 6ம் தேதி முதல் ஜனவரி 22ம் தேதி வரை நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த புத்தக கண்காட்சியை ஜனவரி 6ம் தேதி மாலை 5.30 மணிக்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைக்க உள்ளார். 

புத்தக கண்காட்சிக்காக நந்தனம் ஒய்.எம்.சி.ஏ மைதானத்தில் 800 அரங்குகள் அமைக்கும் பணிகள் தொடங்கப்பட்டுள்ளன. இதில்  திருநங்கைகளுக்காக ஒரு அரங்கு ஒதுக்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது. இதனை தென்னிந்திய புத்தக விற்பனையாளர் மற்றும் பதிப்பாளர் சங்கத் தலைவர் வைரவன் தெரிவித்துள்ளார். இந்த கண்காட்சி குறித்து செய்திக்குறிப்பு ஒன்றை  தென்னிந்தியப் புத்தக விற்பனையாளர் மற்றும் பதிப்பாளர் சங்கம் வெளியிட்டுள்ளது. அதில் 46 வது சென்னை புத்தக கண்காட்சி நந்தனம் ஒய்.எம்.சி.ஏ மைதானத்தில்  ஜனவரி 6ம் தேதி மாலை 5.30 மணிக்கு தொடங்க உள்ளது.

புத்தக கண்காட்சி

சென்னையில் நடைபெறும்  46 வது சர்வதேச புத்தக கண்காட்சியை முதல்வர் ஸ்டாலின் தொடங்கி வைக்கிறார். அவருடன் தமிழக பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழியும்  கலந்து கொள்கிறார்.  புத்தகக்கண்காட்சி நடத்தப்படும் அதே மைதானத்தில்  ஜனவரி 16 முதல் 18 வரை 3 நாட்கள் சென்னை சர்வதேச புத்தக கண்காட்சி நடைபெற உள்ளது. இந்த கண்காட்சியில் உலகம் முழுவதிலும் இருந்து சுமார் 40 க்கும் மேற்பட்ட நாடுகளில் இருந்து பதிப்பாளர்கள் கலந்து கொள்ள இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 
புத்தகக் கண்காட்சியில்  மொத்தம் 800 அரங்குகள் அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது.

புத்தக கண்காட்சி book fair

தினமும்  காலை 11 மணியிலிருந்து இரவு 9 மணி வரை புத்தகக் கண்காட்சி நடைபெறும். தமிழக அரசின் பாடநூல் நிறுவனம், உலகத் தமிழ் ஆராய்ச்சி நிறுவனம், மத்திய அரசின் சாகித்ய அகாடமி, நேஷனல் புக் டிரஸ்ட் தஞ்சை தமிழ் பல்கலைக்கழகம்  உட்பட பல பதிப்பாளர்கள்  கலந்து கொள்கின்றனர். புத்தக கண்காட்சியை தொடங்கி வைக்கும் முதல்வர் இந்த விழாவில்  2023ம் ஆண்டிற்கான முத்தமிழ் அறிஞர் கலைஞர் கருணாநிதி பொற்கிழி விருதும், சிறந்த பதிப்பாளர்களுக்கான விருதும்,  பபாசி விருதுகளும் வழங்கப்பட உள்ளன. கடந்த ஆண்டு கலைஞர் கருணாநிதியின் கனவு திட்டமான புத்தக பூங்காவுக்கு இடம் அளிப்பதாக முதல்வர் ஸ்டாலின் உறுதி அளித்துள்ளார் என பதிப்பாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. 

மார்கழி மாத விரத முறைகள், வழிபாடு, பலன்கள்!

அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

சபரிமலை போறீங்களா?! 60 நாட்களுக்கு உணவு, தங்குமிடம் எல்லாமே இங்கே ஃப்ரீ தான்!!

From around the web