ஜல்லிக்கட்டு போட்டியால் காளை உயிரிழப்பு! சோகத்தில் ஆழ்ந்த பொதுமக்கள்!

 
ஜல்லிக்கட்டு உச்சநீதிமன்றம்

நாமக்கல் ராசிபுரம் அருகே ஜல்லிக்கட்டு போட்டிகள் நடைப்பெற்று வந்த நிலையில், மின்சாரம் தாக்கி ஜல்லிக்கட்டு காளை உயிரிழந்த சம்பவம் ஜல்லிக்கட்டு போட்டிகளைப் பார்வையிட திரண்டிருந்த மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியது. போலீசாரின் விசாரணையில், இந்த பகுதியில் அனுமதியின்றி ஜல்லிக்கட்டு போட்டிகள் நடைப்பெற்றது தெரிய வந்தது. 

பொங்கல் பண்டிகையையொட்டி, தமிழகம் முழுவதும் நேற்று கோலாகலமாக மக்கள் தை மகளை வரவேற்று கொண்டாடினார்கள். தமிழர்களின் வீர விளையாட்டான ஜல்லிக்கட்டு போட்டிகளும் பல ஊர்களில் நடைப்பெற்றது. அதன்படி, மதுரை அவனியாபுரத்தில் நேற்று ஜல்லிக்கட்டு போட்டி நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து இன்று பாலமேடு, நாளை அலங்காநல்லூர் பகுதியில் ஜல்லிக்கட்டு போட்டி நடைபெற உள்ளது.

இந்நிலையில் நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அடுத்து உள்ள மங்களபுரம் அருகே ராமநாதபுரம் பகுதியில் நேற்று காலை 8 மணிக்கு அனுமதியின்றி ஜல்லிக்கட்டு போட்டி நடைபெற்றது. இந்த போட்டியில், மங்களபுரம், முள்ளுக்குறிச்சி, ஆயில்பட்டி, தம்மம்பட்டி உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்த 200க்கும் மேற்பட்ட காளையர்கள் மற்றும் 50க்கும் மேற்பட்ட காளைகள் கலந்து கொண்டனர்.

Mangalapuram

இதையடுத்து வாடிவாசலில் இருந்து துள்ளிவரும் காளைகளை, மாடுபிடி வீரர்கள் பிடிக்க முயன்றுள்ளனர். அப்போது காளை ஒன்று அருகில் உள்ள செல்வம் என்பவரது விவசாய நிலத்திற்குள் சென்றது. இதைத் தொடர்ந்து விவசாய நிலத்தைச் சுற்றி அமைக்கப்பட்டுள்ள மின்சார வேலியில் சிக்கிய காளை மீது மின்சாரம் தாக்கி சம்பவ இடத்திலேயே பிரதாபமாக உயிழந்தது.

இது குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த மங்களபுரம் போலீசார் அனுமதி இன்றி நடைபெற்ற ஜல்லிக்கட்டு போட்டியை தடுத்து நிறுத்தினர். இது குறித்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கலைச் செல்வனிடம் கேட்ட போது, ஜல்லிக்கட்டு நடைபெறுவதாக தகவல் வந்ததை அடுத்து சம்பவ இடத்திற்குச் சென்ற போலீசார் ஜல்லிக்கட்டு போட்டியை நிறுத்தி விட்டனர்.

Mangalapuram-PS

காளை உயிரிழந்தது தொடர்பாக விசாரணை செய்து, அனுமதியின்றி போட்டி நடத்தியவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்தார். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

2023 இந்த 6 ராசிகளுக்கு அதிர்ஷ்டம் அலைமோதும்! பயன்படுத்திக்கோங்க

From around the web