கொத்து , கொத்தாக மடிந்த உயிர்கள்!! தேசிய நெடுஞ்சாலையில் பரபரப்பு!!

 
ஆடுகள்

தமிழகத்தில் சிவகங்கை மாவட்டம் காளையார் கோயில் பகுதியில் வசித்து வருபவர் காசிநாதன் மகன் லட்சுமணன் . இவர்  கடந்த 20 ஆண்டுகளாக கடலூர் மாவட்டம் கள்ளக்குறிச்சி , உளுந்தூர்பேட்டை, பகுதிகளில் செம்மறி ஆடுகளை மேய்த்து வந்தார். வழக்கம் போல்  நேற்றும் ஆடுகளை மேய்த்து வீடு திரும்பிக்கொண்டிருந்தார். நேற்று  இரவு எலவசனூர் கோட்டையில் இருந்து திருச்சி சென்னை தேசிய நெடுஞ்சாலையில் 300க்கும் மேற்பட்ட செம்மறி ஆடுகளை ஓட்டிக் கொண்டு லட்சுமணன் இரு சக்கர வாகனத்தில் ஆடுகளின் பின்னால் வந்து கொண்டிருந்தார்.

ஆடுகள்

சேப்பாக்கம் மணிமுத்தாறு பாலம் அருகே பின்னால் வந்த திருச்சி நோக்கி சென்றுக் கொண்டிருந்த அரசு பேருந்து ஒன்று ஆடுகள் மீது மோதியது. இதில் 100க்கும்  மேற்பட்ட செம்மறி ஆடுகள் தேசிய நெடுஞ்சாலையில் சம்பவ இடத்திலேயே உடல் சிதறி பரிதாபமாக உயிரிழந்தன.ஆடுகளுடனேயே அதனை  ஓட்டிக் கொண்டு வந்த லட்சுமணனும் சம்பவ இடத்திலேயே பலியானார்.

விபத்து

அரசு பேருந்து அதன் பின்னால் வந்த மற்றொரு பேருந்து மற்றொரு  தனியார் பேருந்துடன்  அடுத்தடுத்து மோதி விபத்துக்குள்ளானதில்  பேருந்து பயணிகளில் சில காயங்களுடன் உயிர் தப்பினர். தகவல் தெரிவிக்கப்பட்டதும் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல்துறையினர்  லட்சுமணன் உடவை மீட்டு பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.  சாலையில் சிதறிக் கிடந்த செம்மறி ஆடுகளை சாலையோரம் அப்புறப்படுத்தினர். இச்சம்பவத்தால் திருச்சி  தேசிய நெடுஞ்சாலையில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. மேலும் இச்சம்பவம்   அப்பகுதியில் பெரும் சோகத்தையும், பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது. 

மார்கழி மாத விரத முறைகள், வழிபாடு, பலன்கள்!

அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

சபரிமலை போறீங்களா?! 60 நாட்களுக்கு உணவு, தங்குமிடம் எல்லாமே இங்கே ஃப்ரீ தான்!!

From around the web