கோவில்களில் விஐபி தரிசன முறை ரத்து?! அமைச்சர் சேகர்பாபு அதிரடி!!

 
கோவில் சேகர்பாபு

சென்னையில்  இந்து சமய அறநிலையத்துறை ஆணையர் அலுவலகத்தில் இன்று சட்டமன்ற அறிவிப்புகளின் பணி முன்னேற்றம் மற்றும் இதர பணிகள் குறித்த சீராய்வுக் கூட்டம் நடத்தப்பட்டது. இந்து அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில் இந்து சமய அறநிலை துறை ஆணையர் மற்றும் இணை ஆணையர்கள் அனைவரும் கலந்து கொண்டனர். இக்கூட்டத்திற்கு பிறகு செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் சேகர்பாபு, ஒவ்வொரு மாதமும்  இந்து சமய அறநிலைத்துறை செயலாளர் தலைமை மற்றும் ஆணையர் தலைமையில்  சீராய்வு கூட்டம் நடத்தப்பட்டு வருகிறது.

கோவில் சேகர்பாபு

அந்த வகையில் இன்று 15வது சீராய்வு கூட்டம். மானிய கோரிக்கை விவாதத்தில் சட்டமன்றத்தில்  அறிவிக்கப்பட்ட பணிகளின் முன்னேற்றம்  , டெண்டர்கள் குறித்து விவாதிக்கப்பட்டது.  2022-23ம் ஆண்டில் 3200 கோடி ரூபாய்க்கு  பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இன்றைய கூட்டத்தில்,  கோவில்களில் மருத்துவமனைகள், அன்னதானம் குறித்தும் விவாதிக்கப்பட்டது.  தமிழகத்திலிருந்து சபரிமலை செல்ல விரும்பும் பக்தர்கள் வசதிக்காக  அரசு சார்பில்  அதிகாரிகளை நியமிக்கவும் பேசப்பட்டுள்ளது. கார்த்திகை மாத பௌர்ணமிக்கு திருவண்ணாமலை தீபத்திருவிழாவிற்கு  30 லட்சத்திற்கும் மேல் பக்தர்கள் வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. பக்தர்கள் பாதுகாப்பு , அதற்கான ஏற்பாடுகள் குறித்து இந்த கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டது. கோவில் நிலங்கள் ,  ஆக்கிரமிப்பு சொத்துகள் மீட்கப்பட்டு வருகின்றன. 

கோவில் சேகர்பாபு


திருகோவில்களில்  VIP தரிசனம்  விரைவில் முடக்கப்படும். பெரிய கோவில்களில் VIP தரிசனம் மற்றும், கட்டண  தரிசன முறையும் அந்தந்த கோவில்களில் வருமானம் பொறுத்து படிப்படியாக குறைத்து கொள்ளப்படும். கோவில்களில் அனைவரும் சமமே.  உயர்ந்தவர்கள், தாழ்ந்தவர்கள் யாரும் இல்லை என்பதை உறுதி செய்யும் வகையில்  பல்வேறு கோவில்களில் வி.ஐ.பி தரிசனத்தை முழுமையாக தடை செய்வதற்கான முயற்சியில் இந்து சமய அறநிலையத்துறை ஈடுபட்டு வருகிறது என அமைச்சர் சேகர் பாபு தெரிவித்துள்ளார்.  

சபரிமலை போறீங்களா?! 60 நாட்களுக்கு உணவு, தங்குமிடம் எல்லாமே இங்கே ஃப்ரீ தான்!!

அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

மப்பேறி தள்ளாடும் நாய்!! மதுவை குடித்ததால் பரிதாபம்!!

From around the web