அடுத்த 5 நாட்களுக்கு மிதமான மழைக்கு வாய்ப்பு!!

 
மழை

தமிழகத்தில் நிலவி வரும்  கிழக்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக  ஜனவரி 8ம் தேதி வரை மழை பெய்யலாம் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இது குறித்து வெளியிட்ட செய்திக்குறிப்பில் கிழக்கு திசை மாறுபாடு காரணமாக இன்றும் நாளையும் தமிழக கடலோர மாவட்டங்கள்  புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யலாம்.

மிக கன மழை!! இந்த 13 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் நீடிக்கிறது!!

மற்ற  மாவட்டங்களில் வறண்ட வானிலை நிலவக்கூடும். வட தமிழகத்தில் சில இடங்களில் லேசான பனிமூட்டம் இருக்கலாம். நீலகிரி மாவட்டத்தில் இரவு நேரங்களில்  உறைபனி பெய்யலாம். ஜனவரி 8ம் தேதி வரை தென் தமிழக மாவட்டங்கள், டெல்டா மற்றும் அதனை ஒட்டிய மாவட்டங்கள், காரைக்கால் பகுதிகளில் ஒரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

உ.பி கன மழை

பிற மாவட்டங்கள் மற்றும் புதுவை பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும். சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒரு சில இடங்களில் லேசான மழை பெய்யக்கூடும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

மார்கழி மாத விரத முறைகள், வழிபாடு, பலன்கள்!

அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

சபரிமலை போறீங்களா?! 60 நாட்களுக்கு உணவு, தங்குமிடம் எல்லாமே இங்கே ஃப்ரீ தான்!!

From around the web