விலை குறைவான மல்டிபேக்கர் பங்கு: அப்பர் சர்க்யூட்டில் வர்த்தகம்.. இந்தப் பங்கைக் கவனியுங்கள்!

 
ஷேர் பங்குசந்தை டலால் ஸ்ட்ரீட்

நேற்று பி.எஸ்.இயில் அதிக லாபம் ஈட்டிய நிறுவனங்களில் ஒன்றான துருவா கேபிடல் சர்வீசஸ் லிமிடெட் பங்குகள் அதன் முந்தைய வர்த்தகமான 39.70-ல் இருந்து 5 சதவீதம் அப்பர் சர்க்யூட்டில் உயர்ந்து ஒரு பங்கின் விலை ரூ.41.65 ஆக உயர்ந்துள்ளது. வெறும் 1 மாதத்தில் இந்த பங்கு 109.72 சதவீதம் மல்டிபேக்கர் வருமானத்தை அளித்தது. சமீபத்திய வர்த்தக அமர்வுகளில், பங்குகள் மீண்டும் மீண்டும் அப்பர் சர்க்யூட்டில் வர்த்தகமானதோடு அதன்  52 வார உச்சத்தை தொட்டது.

இந்நிறுவனம் அதன் காலாண்டு மற்றும் வருடாந்திர நிதிநிலை அறிக்கைகளில் சிறந்த புள்ளிவிவரங்களை வழங்கியது. நிகர விற்பனை FY21 ஐ விட FY22 ல் 8.62 சதவீதம் அதிகரித்துள்ளது மேலும் நிகர லாபம் FY22ல்  FY21ல்  இருந்த 92.86 சதவீதம் அதிகரித்துள்ளது என்று வருடாந்திர நிதிநிலை அறிக்கை கூறுகிறது.

ஷேர் துருவா கேப்பிடல்

துருவா கேபிடல் சர்வீசஸ் லிமிடெட் 1 வருட சிஏஜிஆர் முறையே 566 சதவீதத்துடன் ரூபாய 13.58 கோடி சந்தை மூலதனத்தைக் கொண்டுள்ளது. எனவே, இவை அனைத்தும் சிறந்த நிர்வாக செயல்திறனைக் குறிக்கின்றன. இதில் முதலீட்டை செய்ய நிறைய பேர் காத்திருக்கிறார்கள் அப்படினா நீங்க ! துருவா கேபிடல் சர்வீசஸ் லிமிடெட் வங்கி அல்லாத நிதி நிறுவனமாக (NBFC) செயல்படுகிறது. நிறுவனம் முதலீடு மற்றும் நிதியுதவியில் ஈடுபட்டுள்ளது.

ஷேர் துருவா கேப்பிடல்

துருவா கேபிடல் சர்வீசஸ் இந்தியாவில் உள்ள வாடிக்கையாளர்களுக்கு சேவை செய்கிறது. மேலும், நிறுவனம் 2023ம் ஆண்டில் அங்கீகரிக்கப்பட்ட பங்கு மூலதனத்தை அதிகரிக்கும். கடந்த 6 மாதங்களில், பங்கு 120.37 சதவிகிதம் மல்டிபேக்கர் வருமானத்தை அளித்தது மற்றும் 1 வருடத்தில் அது 526.32 சதவிகிதமாக உயர்ந்தது. முதலீட்டாளர்கள் இந்த ஸ்மால்-கேப் பங்கின் மீது ஒரு கண் வைத்திருக்க வேண்டும் என்கிறார்கள் சந்தை நிபுணர்கள்.

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? எந்த வியாபாரம் உங்களுக்கு லாபம் தரும்!?

அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம

From around the web