டெய்லி செக் பண்ணிக்கோங்க!! டிஎன்பிஎஸ்சி குரூப் 4 முடிவுகள் விரைவில் வெளியாக வாய்ப்பு!!

 
டிஎன்பிஎஸ்சி

தமிழக அரசின் காலிப்பணியிடங்கள் தமிழ்நாடு அரசு தேர்வாணையம் மூலம் நிரப்பப்பட்டு வருகின்றன. அந்த வகையில் ஜூலை 24, 2022ம் தேதி குரூப் 4 தேர்வுகள் நடத்தப்பட்டன.  இதில் தேர்ச்சி பெறுபவர்கள் கட் ஆப் மதிப்பெண்கள் அடிப்படையில்  கிராம நிர்வாக அலுவலர், இளநிலை உதவியாளர், தட்டச்சர், சுருக்கெழுத்தர் தட்டச்சர், பண்டகக் காப்பாளர் பணியிடங்கள் நிரப்பப்படும்.  

டிஎன்பிஎஸ்சி

இந்த எழுத்துத் தேர்வில் தேர்ச்சி பெறுபவர்களில் 1 பதவிக்கு 2 பேர் என்ற விகிதத்தில் கலந்தாய்விற்கு அனுமதிக்கப்படுவர் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.  கலந்தாய்வின் முடிவில் 7301 பேர்  தமிழக  அரசின் பல்வேறு துறைகளில் பணியில் அமர்த்தப்படுவர். குரூப் 4 எழுத்துத் தேர்வு முடிவடைந்து மாதங்கள் கடந்த பின்னும் முடிவுகள்  வெளியிடப்படவில்லை.  அத்துடன் அடுத்த ஆண்டு 2023ல் குரூப் 4, குரூபி 2/2ஏ, குரூப் 1 தேர்வுகள் நடைபெறாது என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில்   தற்போதைய குரூப் 4 முடிவுகள் குறித்த எதிர்பார்ப்பு தேர்வர்கள் மத்தியில் இன்னும் அதிகரித்துள்ளது.  

tnpsc டிஎன்பிஎஸ்சி அரசு

இதற்கு முன் அக்டோபர் 2022க்குள் முடிவுகள் வெளியிடப்படும் என தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம்  தெரிவித்திருந்தது. இந்நிலையில், அரசு வேலைவாய்ப்புகளில் மகளிருக்கான 30% இட ஒதுக்கீடு வழங்கும் முறையை மாற்ற வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. இதன் அடிப்படையில் இந்த புதிய முறையைப் பின்பற்றி குரூப் 4 தேர்வு முடிவுகள் வெளியிடப்பட உள்ளன.  இன்று முதல் எப்போது வேண்டுமானாலும் டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வு முடிவுகள் வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. முடிவுகள் வெளியாவதை அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் அதிகாரப்பூர்வ இணையதளமான  www.tnpsc.gov.in ல்  பார்த்து அறிந்து கொள்ளலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

மார்கழி மாத விரத முறைகள், வழிபாடு, பலன்கள்!

அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

சபரிமலை போறீங்களா?! 60 நாட்களுக்கு உணவு, தங்குமிடம் எல்லாமே இங்கே ஃப்ரீ தான்!!

From around the web