பரபரக்குது சென்னை! இன்று முழு நேரமும் திறந்திருக்கும்... 150 சிறப்பு பேருந்துகள், 20 கூடுதல் கவுண்டர்கள்!

 
பேருந்து

வண்டலூர் மிருக காட்சி சாலைக்கு வழக்கமாக வார விடுமுறை தினம் செவ்வாய்க்கிழமையாக இருந்து வரும் நிலையில், இன்று காணும் பொங்கலையொட்டி, பொதுமக்களின் வசதிக்காக முழு நேரமும் திறந்திருக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. காணும் பொங்கல் என்பதால், இன்றைய தினம்  கடற்கரை, பார்க், மால்களில் பொதுமக்கள் கூட்டம் அதிகம் இருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இதன் அடிப்படையில் மக்கள் அதிகம் கூடும் இடங்களில் பாதுகாப்பு மற்றும் அவர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

வண்டலூர்

இதனால் சென்னையின் முக்கிய சாலைகளில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக போக்குவரத்து காவல்துறை அறிவித்துள்ளது. சூழ்நிலையை பொறுத்து மேலும் சில மாற்றங்கள் செய்யப்படலாம் எனவும் அவைஉடனுக்குடன் கூகுள் மேப்பில் அப்டேட் செய்யப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

வண்டலூர்
அந்த வகையில் சென்னையின் புறநகர் பகுதியில் செயல்பட்டு வரும்  வண்டலூர் உயிரியல் பூங்கா ஒவ்வொரு வாரமும் செவ்வாய்கிழமைகளில் பராமரிப்பு பணிக்காக விடுமுறை அளிக்கப்படுவது வழக்கம்.

இன்று காணும் பொங்கலை ஒட்டி அதிக மக்கள் கூட்டம் இருக்கும் என்பதால் வழக்கம் போல் இன்று  முழு நேரமும் செயல்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன் மக்கள் கூட்டத்தை சமாளிக்கும் வகையில் சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக பூங்கா நிர்வாகம் அறிவித்துள்ளது. மேலும் பார்வையாளர்களின் வசதிக்காக 20 கூடுதல் கவுண்டர்கள் திறக்கப்படும் எனவும், சென்னையின் முக்கியபகுதிகளில் இருந்து வண்டலூர் வந்து செல்லும் வகையில் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? எந்த வியாபாரம் உங்களுக்கு லாபம் தரும்!?

அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்

From around the web