நாளை முதல்வர் ஸ்டாலின் டெல்லி பயணம்!! மோடியுடன் சந்திப்பு?!

 
ஸ்டாலின்

அமெரிக்கா, கனடா, ஆஸ்திரேலியா, சவூதி அரேபியா, இந்தியா, ரஷ்யா, தென் ஆப்பிரிக்கா, துருக்கி, அர்ஜெண்டினா, பிரேசில், மெக்சிகோ, பிரான்ஸ், ஜெர்மனி, இத்தாலி, பிரிட்டன், சீனா, இந்தோனேசியா, தென் கொரியா  நாடுகள் இணைந்து உலகின் சக்திவாய்ந்த கூட்டமைப்பாக  ஜி20 அமைப்பில் இருந்து வருகிறது. நடப்பாண்டின் ஜி-20 மாநாடு இந்தோனேஷியாவில் நடைபெற்ற நிலையில் அடுத்த ஆண்டு இந்தியாவில்  நடைபெற உள்ளது.2023 ம் ஆண்டிற்கான  ஜி20 மாநாட்டின் தலைமை பொறுப்பை  இந்தியா ஏற்க உள்ளது. இதனையடுத்து  ஜி20  மாநாட்டை வெற்றிகரமாக நடத்துவதற்காக மத்திய அரசு திட்டமிட்டு  வருகிறது. இதற்காக   அனைத்து கட்சி தலைவர்களின் ஆலோசனை  கூட்டத்துக்கு மத்திய அரசு ஏற்பாடு செய்து உள்ளது. 

நாளை டிசம்பர் 5ம் தேதி டெல்லியில்   இந்த ஆலோசனை கூட்டம் நடைபெற இருக்கிறது.  இந்த ஆலோசனைக்கூட்டத்தில்  தமிழகத்தின் சார்பில்   தமிழக முதலமைச்சர்  மு.க.ஸ்டாலின்  கலந்து கொள்ள இருக்கிறார்.

ஜி20

 

அதன்படி நாளை முதல்வர் மு.க.ஸ்டாலின்   டெல்லி சென்று ஆலோசனை கூட்டத்தில் கலந்து கொண்டு விட்டு நாளையே மீண்டும் சென்னை திரும்புவார் என முதல்வர் அலுவலக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. ஆலோசனை கூட்டத்துக்கு தலைமை தாங்கும் பிரதமர் மோடி அனைத்து கட்சி தலைவர்களையும் வரவேற்கிறார். ஆனால் தனித்தனியாக அவர் யாரையும் சந்திக்கவில்லை என்று அறிவிக்கப்பட்டுள்ளது. எனவே பிரதமர் மோடியை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனியாக சந்தித்து பேச வாய்ப்பு இல்லை என்ற தகவல் வெளியாகி உள்ளது.

ஜி20

 

இந்தியாவில் விரைவில் ஜி20 மாநாட்டின் நிகழ்வுகள் அனைத்தும் நாடு முழுவதும் உள்ள பல மாநிலங்களின் தலைநகரம் மற்றும் முக்கியத்துவம் வாய்ந்த சுற்றுலா நகரங்களில் நடத்த மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.   நாடு முழுவதும் உள்ள பல மாநிலங்களின் தலைநகரம் மற்றும் முக்கியத்துவம் வாய்ந்த சுற்றுலா நகரங்களில் ஜி20 மாநாடு நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.
இந்த மாநாட்டில் உலகெங்கிலும் பல்வேறு நாடுகளில் இருந்து விருந்தினர்கள் கலந்துகொள்ள உள்ளனர். அவர்கள் நம் நாட்டின் கலை, கலாசாரம், பண்பாடு, பாரம்பரியம் பற்றி தெரிந்து கொள்ளும் வகையிலும்  நாடு முழுவதும் தொல்லியல் துறையின் கட்டுப்பாட்டில் உள்ள உலக பாரம்பரிய புராதன சின்னங்கள் மூலம் இந்த மாநாட்டை விளம்பரப்படுத்தும் வகையிலும் அந்தந்த நகரங்களில் உள்ள புராதன சின்னங்கள் ஜி20 லேசர் ஒளி வெளிச்சத்தில் மிளிரும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

சபரிமலை போறீங்களா?! 60 நாட்களுக்கு உணவு, தங்குமிடம் எல்லாமே இங்கே ஃப்ரீ தான்!!

அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

மப்பேறி தள்ளாடும் நாய்!! மதுவை குடித்ததால் பரிதாபம்!!

From around the web