முதல்வர் விசிட்.. திருச்சியில் கணக்கெடுப்புப் பணி தீவிரம்! நேருவின் கோட்டையில் விரிசல்!?
இன்று திருச்சிக்கு தமிழக முதல்வர் ஸ்டாலின் வருகை புரிந்த நிலையில், பல்வேறு திட்டங்களை ரூபாய் 1042 கோடியில் தொடங்கி வைத்துள்ளார். அதில் என்ன ஆச்சர்யம் எனத் தானே கேட்கிறீர்கள்? நாளிதழ்கள் மட்டுமல்லாது ஊர் முழுவதும் வழி நெடுக போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளது.
ஏற்கனவே திருச்சி மலைக்கோட்டை நகரம் கட்சி ரீதியாக இரண்டாக பிரிந்து கிடக்கிறது. கே.என்.நேரு ஆதரவாளர்கள், அன்பில் மகேஷ் பொய்யாமொழி ஆதரவாளர்கள் என பிரிந்து கிடக்கிறார்கள் திமுக தொண்டர்கள். இந்நிலையில் நேருவின் மகன் படத்தைப் போடாமல் போஸ்டர் அடிப்பவர்கள் யார் யார் என கணக்கெடுக்கும் பணி தொடங்கியுள்ளதாம், இனி வரும் காலங்களில் அருணின் படத்தை பயன்படுத்தாதவர்களை அன்பில் குரூப் அரவணைக்க தயாராகிறதாம்.
ஏற்கனவே நேருவின் ஆதரவாளர்களாக அறியப்பட்ட பலர் கூடாரத்தை காலி செய்து விட்டு வேற்று முகாமுக்கு நகர்ந்து கொண்டிருக்கும் வேளையில் இன்றைய போஸ்டர் மற்றும் நாளிதழ்கள் யுத்தம் இதனை வெட்ட வெளிச்சமாக்கி விட்டது என புலம்ப ஆரம்பித்து விட்டார்கள் உடன்பிறப்புக்கள்.

தமிழகத்தில் ஆளும் கட்சியான திமுகவில் இளைஞரணி, மகளிர் அணி, மாணவர் அணி என 23 அணி கள் மற்றும் 11 குழுக்கள் உள்ளன. இந்த அணிகளுக்கான மாநில நிர்வாகிகள், குழுக்களுக்கான மாநில உறுப்பினர்கள் சமீபத்தில் நியமிக்கப்பட்டனர். அதன் பிறகு நடந்த திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் பேசிய கட்சியின் முதல்வர் ஸ்டாலின் , "லோக்சபா தேர்தல் பணிகளை இப்போது இருந்தே தொடங்குங்கள். லோக்சபா தேர்தல் வெற்றிக்காக பாஜவினர் எந்த எல்லைக்கும் செல்வார்கள். எதையும் செய்யத் தயங்க மாட்டார்கள். அதை எதிர் கொள்ள ஒவ்வொருவரும் தங்களை தயார்படுத்திக் கொள்ள வேண்டும். அணிகளில் வழங்கப்பட்ட பொறுப்பை பெருமையாக கருதிக் கொண்டு இருக்காமல், களத்தில் இறங்கி பணியாற்ற வேண்டும். எல்லா அணிகளும் ஒருங்கிணைந்து செயல்படுங்கள். அப்போது தான் நமது வெற்றியை உறுதி செய்ய முடியும். எதிரிகளுக்கு எள்முனை அளவும் இடம் கொடுத்துவிடக் கூடாது" என்றார். எதிர்கட்சியாக அதிமுக இருக்கையில் இவர் ஏன் பாஜகவை கண்டு அச்சப்படுகிறார் என பெரிய விவாதமே நடந்தது.
நுனி மரத்தில் அமர்ந்து கொண்டு, அடி மரத்தை வெட்ட நினைக்கிறார்கள் என்று நேருவின் கோட்டையில் கை வைப்பதைப் பார்த்து நமுட்டு சிரிப்பு சிரிக்கிறார்கள் உடன்பிறப்புகள். இதையெல்லாம் மிஞ்சும் அளவுக்கு திமுகவில் உள்ள அணிகள், குழுக்களின் மாநில நிர்வாகிகள் கூட்டத்தில், "அணிகளின் செயல்பாடுகள் அந்தந்த மாவட்ட செயலாளர்களை சார்ந்தே இருக்கிறது. நிர்வாகிகள் நியமனத்தில் கூட அவர்களின் தலையீடு உள்ளது. அணிகளுக்கு சுதந்திரம் வேண்டும்" என்று இளைஞரணி செயலாளர் உதயநிதியும் உரிமைக்குரல் எழுப்பியதை தொடர்ந்து கட்சியின் போஸ்டர், விளம்பரங்களில் அணிகளின் நிர்வாகிகளுக்கும் முக்கியத்துவம் அளிக்க வேண்டும் என்று திமுக தலைவர் ஸ்டாலின் மறைமுகமாக உத்தரவிட்டுள்ளாராம்,

உதயநிதி பேச்சு குறித்து கூட்டத்தில் இருந்த நிர்வாகிகளில் சிலர் கூறுகையில், "மாவட்ட செயலாளர்களிடம் இருந்து, அணிகளுக்கு சுதந்திரம் வேண்டும் என்ற உதயநிதியின் பேச்சால் மூத்த நிர்வாகிகள் ஒரு நிமிடம் ஆடிப் போய் விட்டனர். இதன் மூலம் இனி எல்லா இடங்களிலும் தான் வைத்த ஆட்கள் தான் இருப்பார்கள் என்பதை உதயநிதி மூத்த நிர்வாகிகளுக்கு சொல்லாமல் சொல்லியிருக்கிறார். இந்நிலையில் அணிகளின் மீதான மாவட்ட செயலாளர்களின் பிடியை தளர்த்த வேண்டும் என்ற உதயநிதியின் கோரிக்கையை ஆமோதிக்கும் வகையில் ஸ்டாலினும் பேசியிருப்பது அணி நிர்வாகிகளை உற்சாகப்படுத்தியுள்ளது" என்கின்றனர் இளைஞரணியினர்.
ஆக ஆக அடுத்த தலைமுறையை நோக்கி நகர ஆரம்பித்து விட்டது திமுக கட்சியின் தலைமை அதற்கேற்ப உதயநிதிக்கு எல்லாமுமாக இருக்கும் முன்னாள் பத்திரிக்கையாளர் ஒருவர் ஆனந்தமாக இருப்பதுடன் கலைஞருக்கு எப்படி சண்முக சுந்தரமோ அப்படி உதயநிதிக்கு நான். என் பெயரிலும் முருகன் குடி கொண்டிருக்காரு தெரியுமா என சிலாகிக்கிறாராம்.
ஊரு ரெண்டு பட்டால் கூத்தாடிக்கு மட்டுமா கொண்டாட்டம் பத்திரிக்கையாளர்களுக்கும் தான் வேறு என்னத்த சொல்ல!
மார்கழி மாத விரத முறைகள், வழிபாடு, பலன்கள்!
அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!
சபரிமலை போறீங்களா?! 60 நாட்களுக்கு உணவு, தங்குமிடம் எல்லாமே இங்கே ஃப்ரீ தான்!!
