ரேஷன் கடைகளில் பாமாயிலுக்கு பதில் தேங்காய் எண்ணெய்?!

 
ரேஷனில் தேங்காய்

தமிழகத்தில் ரேஷன் கடைகளில் தேங்காய் வழங்கப்படுவது குறித்து உணவுத்துறை அமைச்சர் மதுரையில் செய்திக்குறிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் தமிழகத்தில் பொங்கல் சிறப்பு தொகுப்பிற்கான டோக்கன்  வீடு வீடாக வழங்கப்பட்டு வருகிறது. தமிழகம் முழுவதும் 2 கோடியே 10 லட்சம் பேருக்கு பொங்கல் பரிசு தொகுப்பு, ரொக்க பணம் வழங்கப்படும்.

ரேஷன் விரல் பதிவு கைரேகை

தமிழகம் முழுவதும் 2 கோடியே 10 லட்சம் பேருக்கு பொங்கல் பரிசு தொகுப்பு, ரொக்க பணம் வழங்கப்படும். தமிழகம் முழுவதும் 13 திறந்தவெளி நெல் சேமிப்பு கிடங்குகள் மூலம் நெல் மூட்டைகள் மழையால் சேதம் அடைவதை தவிர்க்கப்படும்.  தமிழகத்தில் விவசாயிகள் தேங்காய் எண்ணெயை ரேஷன் கடைகள் மூலம் விற்பனை செய்ய வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளனர். இந்த கோரிக்கையை முதலமைச்சரின் கவனத்திற்கு எடுத்துச் சென்று விரைவில் நிறைவேற்ற நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்துள்ளார்.

ரேஷன்

தமிழகத்தில்  ஒவ்வொரு ஆண்டும் தமிழர் பண்டிகையாம் பொங்கல் பண்டிகைக்கு  தமிழக அரசு சார்பில் பொங்கல் சிறப்பு தொகுப்பு வழங்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் நடப்பாண்டிலும் பொங்கல் தொகுப்பு வழங்க அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டு வருகின்றன. புது உத்தரவாக பயனாளர்களுக்கு செங்கரும்பு வழங்கப்பட இருக்கிறது. இந்த பணிகளுக்காக ஜனவரி 2ம் தேதி முதல்வர் துவக்கி வைக்கப்பட இருந்த நிலையில், ஜனவரி 9ம் தேதிக்கு மாற்றப்பட்டது.

இதன் காரணமாக வீடு வீடாக வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்த டோக்கன் விநியோகமும் தாமதமானது.  இத்தனைக் குளறுபடிகளையும், எதிர் கட்சியாக இருந்த போது மு.க.ஸ்டாலின் எப்படி எதிர்கொண்டு விமர்சித்திருப்பார் என்று நக்கலாக சிரிக்கிறார்கள் அரசியல் விமர்சகர்கள்.நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், விடுதலை சிறுத்தைகள் தொல்.திருமா என பல அரசியல் கட்சி தலைவர்கள் தொடர்ந்து வலியுறுத்தி வந்த நிலையில், விவசாயிகளின் நலனைக் கருத்தில் கொண்டு, பொங்கல் பரிசு தொகுப்புடன் கரும்பு வழங்க முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.  முன்னதாக கரும்பு உட்பட பொங்கல் சம்பந்தமான பொருட்கள் இல்லாமல் பொங்கல் தொகுப்பு வழங்க உத்தரவிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

மார்கழி மாத விரத முறைகள், வழிபாடு, பலன்கள்!

அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

சபரிமலை போறீங்களா?! 60 நாட்களுக்கு உணவு, தங்குமிடம் எல்லாமே இங்கே ஃப்ரீ தான்!!

From around the web