250 பள்ளிகளில் கோடிங், ரோபோடிக்ஸ்!! அமேசான் அடுத்த அதிரடி!!

 
அமேசான் மாணவர்கள்

உலகளாவிய ஆன்லைன் வர்த்தக நிறுவனங்களில் ஒன்று அமேசான் நிறுவனம். இந்நிறுவனம் சமீபத்தில் தமிழகத்தில் தனது கல்விச்சேவையை தொடங்கியுள்ளது. அதன் ஒரு பகுதியாக  ‘ஃபியூச்சர் என்ஜினீயர்’ திட்டத்தின் மூலம் தமிழகம் முழுவதும்  உள்ள 250 பள்ளிகளில் கோடிங் மற்றும் ரோபோடிக்ஸ் பற்றிய பாடங்களைக் கற்றுக்கொடுக்கும் முயற்சியில் இறங்கி உள்ளது.

ரோபோடிக்ஸ்

இத்திட்டத்தில் அமேசானுடன் சென்னையின்  ஆஷா தொண்டுநிறுவனமும் இணைந்து பணிபுரிந்து வருகிறது. இதன்  முதல் கட்டமாக சென்னையின் புறநகர் பகுதியான ராமஞ்சேரியிலும் வகுப்புக்கள் தொடங்கப்பட்டுள்ளன. இத்திட்டத்தின் கீழ் நடத்தப்படும் வகுப்புக்கள் அனைத்தும்  எளிதாக புரியும் வகையில்  இருப்பதாக மாணவர்கள் தெரிவித்துள்ளனர். ‘கப் கேம்ஸ்’ மற்றும் தரையில் கண்ணாடியால் வரையப்பட்ட கட்டங்கள் மூலம் கோடிங் வகுப்புக்கள் நடத்தப்படுகின்றன.

அமேசான்

மேலும்  ஃபியூச்சர் என்ஜினீயர் திட்டத்தின் மூலம் அமேசான் மாணவர்களுக்கு மடிக்கணினி உட்பட தேவையான உபகரணங்களையும் வழங்கியுள்ளது.பரிசோதனை அடிப்படையில் தற்பொழுது 100 பள்ளிகளில் இத்திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. படிப்படியாக  மேலும் 150பள்ளிகளில் விரிவாக்கம் செய்யப்படும்.   எளிய முறையில் மாணவர்களிடையே கற்றல் திறனை ஊக்குவித்து அவர்களின் எதிர்காலத்தை வளமாக்க அனைத்து முயற்சிகளும் மேற்கொள்ளப்படும் என ஆஷா தொண்டு நிறுவனம் அறிவித்துள்ளது. 

சபரிமலை போறீங்களா?! 60 நாட்களுக்கு உணவு, தங்குமிடம் எல்லாமே இங்கே ஃப்ரீ தான்!!

அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

மப்பேறி தள்ளாடும் நாய்!! மதுவை குடித்ததால் பரிதாபம்!!

From around the web