பெற்றோர் கண்டித்ததால் கல்லூரி மாணவி தூக்கிட்டு தற்கொலை!! தொடரும் சோகம்!!

 
ஸ்ரீமதி

சமீபகாலமாக கல்லூரி மாணவ, மாணவிகள் தற்கொலைகள் அதிகரித்து வருகிறது. மன அழுத்தம் காரணமாக இந்த தற்கொலைகள் நடைபெற்று வருவதாக மனவியல் நிபுணர்கள் தெரிவிக்கின்றனர். இதன் அடிப்படையில் பள்ளிகள், கல்லூரிகளில் மாணவ, மாணவிகளுக்கு நல்லொழுக்க வகுப்புக்கள், விழிப்புணர்வு கூட்டங்கள் நடத்தப்பட்டு வருகின்றன. தாம்பரம் சிட்லபாக்கம், பாரதிபுரம் பகுதியில் வசித்து வருபவர் முரளிதரன். இவரது மகள் 18 வயது ஸ்ரீமதி.

தற்கொலை

இவர் குரோம்பேட்டையில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் பி.காம் முதலாம் ஆண்டு படித்து வருகிறார். இதில் முரளிதரன், தனது மனைவி மற்றும் மகனுடன் சொந்த ஊரான மயிலாடுதுறைக்கு சென்று விட்டார். வீட்டில் ஸ்ரீமதி மட்டும் தனியாக இருந்தார்.இந்நிலையில் கல்லூரிக்கு சென்ற ஸ்ரீமதி, தேர்வு மையத்துக்கு செல்போன் எடுத்து சென்றுள்ளார். கல்லூரி நிர்வாகம் ஸ்ரீமதியை கண்டித்தது. அத்துடன் அவரது பெற்றோரிடமும் ‘இனிமேல் கல்லூரி தேர்வு மையத்துக்கு செல்போன் எடுத்து வரக்கூடாது , மகளை கண்டியுங்கள் எனவும் தெரிவித்துள்ளது.  இதன் பேரில் அவரது பெற்றோர் ,  ‘இனிமேல் கல்லூரிக்கு செல்போன் எடுத்து செல்லக்கூடாது. வீட்டிலும் அதிகம் பயன்படுத்தக்கூடாது’ என மகளை கண்டித்துள்ளனர். 

போலீஸ்
பெற்றோர் கண்டித்ததால் ஸ்ரீமதி மிகுந்த மன அழுத்தத்துக்கு ஆளானார்.  அதிகம் திட்டிவிட்டோமே என ஸ்ரீமதியின் பெற்றோர் சமாதானப்படுத்துவதற்காக  சிறிது நேரம் கழித்து அவரது பெற்றோர் மீண்டும் தொடர்பு கொண்டபோது ஸ்ரீமதி செல்போனை எடுக்கவில்லை .  காலை மீண்டும் ஸ்ரீமதியை அவரது பெற்றோர் செல்போனில் அழைத்த போது அவர் போனை எடுக்காததால் அதிர்ச்சி அடைந்தனர். பின்னர் பக்கத்து வீட்டினரை தொடர்பு கொண்டு வீட்டில் சென்று பார்க்கும்படி கூறினர்.

அவர்கள் முரளிதரன் வீட்டுக்கு சென்று பார்த்தபோது, அங்கு வீட்டின் உள்ளே மாணவி ஸ்ரீமதி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டிருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். இது குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த  காவல்துறையினர் ஸ்ரீமதியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இச்சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

மார்கழி மாத விரத முறைகள், வழிபாடு, பலன்கள்!

அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

சபரிமலை போறீங்களா?! 60 நாட்களுக்கு உணவு, தங்குமிடம் எல்லாமே இங்கே ஃப்ரீ தான்!!

From around the web