நடுரோட்டில் துடிதுடிக்க கல்லூரி மாணவி கொலை! காதலன் வெறிச்செயல்!

 
ராஷி

சைக்கோத்தனமான காதல்கள் அதிகரித்து வருவது தான் பிரச்சனையா? என தெரியவில்லை. அடுத்த தலைமுறை பாதாளத்தை நோக்கி பயணப்படுகிறது என்பது மட்டுமே அடிவயிற்றில் பயத்தைக் கவ்வுகிறது. எத்தனைப் பெண்களின் வாழ்க்கையை இப்படி ஆண் வர்க்கம் சீரழிப்பார்கள் என தெரியவில்லை. கர்நாடக மாநிலம் பெங்களூருவில் நடுரொட்டில் கல்லூரி முடிந்து வீட்டுக்குத் திரும்பிக் கொண்டிருந்த 19 வயது மாணவியைக் கழுத்தை அறுத்துக் காதலன் கொன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

கர்நாடக மாநிலம் பெங்களூருவில் கடந்த சில நாட்களுக்கு முன்பு ஒரு தலை காதல் விவகாரத்தில் பெண் ஒருவர் கல்லூரி வளாகத்திலேயே கொலை செய்யப்பட்ட நிலையில், மீண்டும் ஒரு அதிர்ச்சி சம்பவம் நடைபெற்றுள்ளது. பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்களும், வன்முறை செயல்களும் சமீபமாக நாடு முழுவதுமே அதிகரித்து வருகிறது. சென்னை நுங்கம்பாக்கத்தில் சுவாதி துவங்கி, பரங்கிமலை ரயில் நிலையில், சிதம்பரம் கல்லூரி வாசல் என்று இளம்பெண்கள் ஒருதலைக் காதலால் உயிரை இழக்கிறார்கள்.

பெங்களூரு அடுத்த சண்போகநஹள்ளி பகுதியைச் சேர்ந்தவர் ராஷி (19). இவர் ஏலஹங்கா கல்லுாரியில் முதலாம் ஆண்டு பி.ஏ படித்து வந்தார். நேற்று, கல்லூரி முடிந்து பேருந்தில் திப்பூர் வந்து இறங்கி, வழக்கம்போல வீட்டுக்கு நடந்து சென்று கொண்டிருந்திருக்கிறார். அப்போது, பைக்கில் வந்த இரு வாலிபர்கள் ராஷியை வழிமறித்து, தாங்கள் வைத்திருந்த கத்தியை எடுத்து ராஷியின் கழுத்தை அறுத்து, ரத்த வெள்ளத்தில் ராஷியை அங்கேயே விட்டுத் தப்பிச் சென்றனர்.

murder

இதில், ரத்தவெள்ளத்தில் துடிதுடித்துக் கிடந்த ராஷியை அக்கம் பக்கத்தினர் மீட்பதற்குள், சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இந்தச் சம்பவம் குறித்து, ராஜனுகுந்தே பகுதி போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் ராஷியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இந்த கொலை சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். கொலையின் பின்னணியில் காதல் விவகாரம் உள்ளதா உள்ளிட்ட பல்வேறு கோணங்களில் விசாரணையை தீவிரப்படுத்தியுள்ளனர். மேலும், அப்பகுதியில் உள்ள சிசிடிவி காட்சிகளையும் ஆய்வு செய்து வருகின்றனர்.

ராஷி

இது குறித்து போலீசார் கூறுகையில், “கல்லுாரி மாணவி கொலை செய்யப்பட்டதற்கான காரணம் என்னவென்று தெரியவில்லை. காதல் விவகாரத்தால் கொலை நடந்ததா என்ற கோணத்தில் விசாரிக்கிறோம். அந்தப் பகுதியிலுள்ள சிசிடிவி காட்சிகளை வைத்து, தப்பியோடிய குற்றவாளிகளைத் தேடிவருகிறோம். ராஷியின் மொபைல் போன் அழைப்புகளை ஆய்வு செய்து, அவரின் நண்பர்களிடமும் விசாரிக்கிறோம்” என்றனர்.

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? எந்த வியாபாரம் உங்களுக்கு லாபம் தரும்!?

அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்

From around the web