நடுரோட்டில் 100 பேரைக் கட்டிப் பிடித்த கல்லூரி மாணவிகள்! காரணம் தெரிஞ்சா அசந்துடுவீங்க!

 
கட்டிப்பிடி மாணவி

எதைப் பற்றியும், யாரைப் பற்றியும் கவலையில்லை? ஆனால், அடுத்த தலைமுறை, கற்களை எறியும் இந்த சமூகத்தின் மீது பூச்சொறிகிறார்கள். குறிப்பாக மாணவிகள். யெஸ்.. அதிகளவில் மாணவிகள் இந்த சமூகத்தின் விடியல் குறித்தும், மக்களின் வாழ்க்கைத் தரம் குறித்தும் யோசிக்கிறார்கள். அவர்களை மீட்டெடுக்க முயற்சிக்கிறார்கள். அப்படி பெங்களூருவில் 2 கல்லூரி மாணவிகள் ‛ஃப்ரீ ஹக்ஸ்’ என நடுரோட்டில் கைகளில் போர்டு எழுதி, 1 மணி நேரத்தில் சுமார் நூறு பேரைக் கட்டிப் பிடித்திருக்கிறார்கள்.

ஆமாம்... கமலின் கட்டிப்பிடி வைத்தியம் தான். ஆனால், முகம் தெரியாத.. மன அழுத்தத்தில் இருக்கும் யாரோ எவரோ.. யார் வேண்டுமானாலும் இவர்களைக் கட்டிப் பிடிக்கலாம். பெங்களூருவின் பரபரப்பான எம்.ஜி.ரோடு அருகே சர்ச் தெருவில் சாதாரன நாட்களிலேயே இளமை ஊஞ்சாலாடும். அதுவும் கிறிஸ்துமஸ், புத்தாண்டு கொண்டாட்டங்கள் கூடுதல் அட்ராக்‌ஷன். அந்த பரபரப்பான இடத்தில் தான் அபூர்வா (19) மற்றும் தனிஷி (22) ஆகிய 2 கல்லூரி மாணவிகளும் ‛ஃப்ரீ ஹக்ஸ்’ என பலகையில் எழுதி கையில் வைத்துக் கொண்டு சுற்றி சுற்றி வந்து கொண்டிருந்தனர். 

free hugs

இதில் அபூர்வா அகர்வால் பிபிஏ படித்து வருகிறார். தனிஷி பரஸ்ராம்கா அந்த கல்லூரியில் பட்ட மேற்படிப்பு படித்து வருகிறார். இவர்கள் 2 பேரின் கையில் ‛ஃப்ரீ ஹக்ஸ்’ என எழுதப்பட்டு இருப்பதை பார்த்தவர்கள் 2 பேரையும் அன்பாக கட்டிப்பிடித்து சென்றனர். பொது இடத்தில் 2 மாணவிகள் ‛ஃப்ரீ ஹக்ஸ்’ கொடுப்பதை அந்த வழியாக சென்ற பலரும் ஆச்சரியமாக பார்த்தனர். இன்னும் ஏராளமானவர்கள் அவர்களின் நோக்கம் என்ன? என்பதை கேட்டு அதன்பிறகு கட்டிப்பிடித்து அன்பை பரிமாறி சென்றனர்.

ஒரு மணி நேரத்தில் 100 பேர் கட்டிப்பிடித்தனர். இதுகுறித்து தனிஷி பரஸ்ராம்கா கூறுகையில், “சமூக வலைதளத்தில் பதிவு ஒன்றை படித்தோம். அதில் ஒரு நாளைக்கு ஒருவர் 8 முறை கட்டிப்பிடித்தால் அது மனஅழுத்தம் குறையும் என கூறப்பட்டு இருந்தது. மேலும் அடிக்கடி அன்பாக கட்டிப்புடிப்பதால் மனதை நிலையாக வைக்கவும், ஒருநிலைப்படுத்தவும் முடியும் என நிபுணர்கள் கூறுகின்றனர்.

bengaluru

இன்றைய நவநாகரீக காலத்தில் ஒவ்வொருவரும் வேகமாக இயங்கி வருகின்றனர். மனஅழுத்தத்தில் ஓடி ஓடி இரவு பகலாக உழைத்து வருகின்றனர். ஒவ்வொருவரும் அன்புக்காக ஏங்கும் சூழல் உள்ளது. ஆனால் அதற்கான நேரம் இல்லை. இதனால் அவர்களின் மன அழுத்தத்தை குறைக்கும் ஒரு முயற்சியாக ‛ஃப்ரீஹக்ஸ்’ மேற்கொண்டோம்” என்கிறார்.

மார்கழி மாத விரத முறைகள், வழிபாடு, பலன்கள்!

அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

சபரிமலை போறீங்களா?! 60 நாட்களுக்கு உணவு, தங்குமிடம் எல்லாமே இங்கே ஃப்ரீ தான்!!

From around the web