தொடர் மழை.. சூறாவளி காற்று.. சரிந்தது வாழை வியாபாரம்! கதறும் விவசாயிகள்!?

 
வாழை தோப்பு வாழைமரம்

யானை இருந்தாலும் ஆயிரம் பொன்.. இறந்தாலும் ஆயிரம் பொன் என்பது போல வாழை அள்ள அள்ள வாழையடி வாழையாக பணம் தரும். அதே மாதிரி மழை பொய்த்தாலும் கதறும் விவசாயிகளுக்கு மழை அதிகளவில் பெய்தாலும் பிரச்சனை தான். சமீபத்தில் தென்மாவட்டங்களில் அதிகனமழை ருத்ரதாண்டவமாடிய நிலையில், விவசாயிகள் கதறுகின்றனர்.

தை மகளை வரவேற்க தயாராகி கொண்டிருக்கும் வேளையில், கரும்பு தோப்புகள் நீரில் மிதக்கின்றன. வாழைத் தோப்புகளை சூறாவளி காற்று சாத்தான் வடிவில் விளையாடிச் சென்றுள்ளது. உருளை, கேரட், வெங்காயம், பீட்ரூட் என பூமிக்கடியில் விளைபவை நீரில் மூழ்கி அழுக தொடங்கியுள்ளன. இந்நிலையில், கொள்முதல்விலை சரேலென குறைந்ததால் விவசாயிகள் கதறுகின்றனர். திருச்சி மாவட்ட சுற்று வட்டாரப்பகுதி, கரூர் மாவட்டம் கிருஷ்ணராயபுரம் மற்றும் குளித்தலை வட்டாரத்தின் பல பகுதிகளில் ஆயிரக்கணக்கான ஏக்கர்களில் வாழை சாகுபடியாகிறது. வாழைகளில் இருந்து கிடைக்கும் இலைகளை விவசாயிகள் கட்டுகளாக கட்டி விற்பனைக்கு அனுப்புகின்றனர். இங்கிருந்து திருச்சி, கரூர் உட்பட பல மாவட்டங்களுக்கு மட்டுமின்றி வெளி மாநிலங்களுக்கும்  வாழை இலைக்கட்டுகள் விற்பனைக்கு அனுப்பி வைக்கப்படுகிறது.

வாழை தோப்பு வாழைமரம்

கொரோனாவுக்கு பின்னர், வாழை சாகுபடி கணிசமாக குறைந்தது. இதனால் வாழை இலைக்கு தேவை அதிகரித்தது. தொடர்ந்து, கடந்த ஆடி மாதம் முதலே வாழை இலை நல்ல விலைக்கு விற்பனையாகி வந்தது. வாழை இலை ஒரு கட்டு (120 இலை கொண்டது) 150 முதல் 200 ரூபாய்க்குள் விற்பனையாகும். ஆனால், ஆடி மாதம் முதல் கடந்த சில வாரங்கள் வரை வாழை இலை ஒரு கட்டு சாதாரண நாட்களில் 450 முதல் 500 வரையிலும், முகூர்த்த நாட்களில் ஒரு கட்டு 800 முதல் ஆயிரம் ரூபாய் வரையிலும் விற்றது. 

வாழை தோப்பு வாழைமரம்

கடந்த 20 ஆண்டுகளில் இல்லாத வகையில் வாழை இலை அதிக விலைக்கு விற்பனையானதாக விவசாயிகள் மகிழ்ச்சி தெரிவித்தனர். இந்நிலையில் கடந்த வாரங்களில் பெய்த மழை மற்றும் முகூர்த்த நாட்கள் குறைந்ததால், வாழை இலைகளின் விலை மீண்டும் சரியத் தொடங்கியுள்ளது. நேற்றைய மார்க்கெட் நிலவரப்படி, வாழை இலை ஒரு கட்டு 200 முதல் 250 ரூபாய் வரை விற்பனையாகிறது. 5 மாதங்களாக 'உச்ச விலையில்' இருந்த வாழை இலையின் விலை சரிந்ததால், விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.

சபரிமலை போறீங்களா?! 60 நாட்களுக்கு உணவு, தங்குமிடம் எல்லாமே இங்கே ஃப்ரீ தான்!!

அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

மப்பேறி தள்ளாடும் நாய்!! மதுவை குடித்ததால் பரிதாபம்!!

From around the web