மீண்டும் வேகமெடுக்கும் கொரோனா!! உலக சுகாதார மையம் எச்சரிக்கை!!

 
கொரோனா

 2019  டிசம்பரில் சீனாவில் தொடங்கிய கொரோனா  கடந்த 2 ஆண்டுகளாக உலகம் முழுவதையும் ஆட்டிப் படைத்தது. தடுப்பூசிகள், முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் , தனிமைப்படுத்தல், முகக்கவசம், சமூக இடைவெளி என பல கட்டுப்பாடுகளுக்கு பிறகு தற்போது பெரும்பாலான உலக நாடுகளில் ஓரளவு  இயல்பு நிலைக்கு திரும்பியுள்ளன. ஆனால் பொருளாதார ரீதியாக உலகநாடுகள் பெரும் அவதிக்குள்ளாகி வருகின்றன.

தமிழக கொரோனா

தற்போது மீண்டும் சீனாவில் கொரோனா வேகமெடுத்து பரவி வரும் நிலையில் இது குறித்த எச்சரிக்கை செய்திக்குறிப்பு ஒன்றை உலக சுகாதார நிறுவனம் வெளியிட்டுள்ளது. அதன்படி  2019ல் தொடங்கிய கொரோனாவால் உலகம் முழுவதும் சுமார் 65லட்சம் பேர் உயிரிழந்துள்ளனர்.  இந்நிலையில் கடந்த ஆண்டுடன் ஒப்பிடும் போது தற்போது  கொரோனா பரவல்  8% அதிகரித்துள்ளதாக உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது. உயிரிழப்புகள் அதிக அளவில் பதிவாகவில்லை என்ற போதிலும் மக்கள் விழிப்புடன் செயல்பட வேண்டியது அவசியமாகிறது. உலகம் முழுவதும் பெரும்பாலான நாடுகளில் தடுப்பூசி செலுத்தியிருந்த போதிலும் தற்போது கொரோனாவால் பாதிக்கப்படுபவர்களுக்கு பரிசோதனையில் அலட்சியம் ஏற்பட்டுள்ளது.

கொரோனா

அத்துடன் உரிய தடுப்பு முறைகளையும் கடைப்பிடிப்பதில்லை. இதனால் கொரோனா பரவும் ஆபத்து அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. இந்த வகையில் தான்  சீனாவில் கொரோனா பரவல் மீண்டும் வேகமெடுத்துள்ளது எனத் தெரிவித்துள்ளது.  தற்போது குளிர் பிரதேச நாடுகளில் பண்டிகை காலம் தொடங்கியுள்ள நிலையில் பல லட்சக்கணக்கானோர் இதுவரை  தடுப்பூசி செலுத்திக்கொள்ளவில்லை. பொதுவாகவே குளிர்காலங்களில் சுவாச பிரச்சனைகள் ஏற்படலாம். இவைகளுடன் ஒருவேளை கொரோனா பாதிக்கப்படும்  போது உயிரிழப்புக்கள் உருவாகலாம் எனவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.  தேவையான முன்னேற்பாடுகளை உடனடியாக செயல்படுத்த வேண்டும் என உலக சுகாதார மையம் உலக நாடுகளுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளது. 

சபரிமலை போறீங்களா?! 60 நாட்களுக்கு உணவு, தங்குமிடம் எல்லாமே இங்கே ஃப்ரீ தான்!!

அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

மப்பேறி தள்ளாடும் நாய்!! மதுவை குடித்ததால் பரிதாபம்!!

From around the web