‘துணிவு’ கொண்டாட்டம்.. லாரி மீது ஏறி நடனமாடிய அஜித் ரசிகர்கள் மரணம்!

 
அஜித்

அஜித் - விஜய் நடிகர்களின் படங்கள் ஒரே நாளில் ரிலீஸாக, நேற்று நள்ளிரவு முதலே தமிழகத்தின் பல மாவட்டங்களிலும் ரசிகர்கள் அலப்பறை செய்து வருகின்றனர். இந்நிலையில், அஜித் பட ரிலீஸைக் கொண்டாட லாரி மீது ஏறி நின்று நடனமாடிய அஜித் ரசிகர் உயிரிழந்துள்ளார். கடந்த 8 ஆண்டுகளுக்கு பிறகு ஒரே நாளில்  நடிகர்கள் விஜய், அஜித் திரைப்படங்கள் திரையரங்குகளில் வெளியாகி, ரசிகர்களுக்கு திருவிழாவாய் அமைந்துள்ளன. போனி கபூர் தயாரிப்பில், எச்.வினோத் இயக்கத்தில்  அஜித்தின்  துணிவு படத்தில் மஞ்சு வாரியர், ஜான் கொகேன், நயனா சாய், ஜி.எம். சுந்தர், மகாநதி சங்கர், சமுத்திர கனி, பகவதி பெருமாள் அஜய், வீரா உட்பட பல நட்சத்திர பட்டாளங்கள் நடித்துள்ளனர்.

துணிவு

 ஜிப்ரான் இன்னிசையில்  நீரவ் ஷா ஒளிப்பதிவில் துணிவு  திரைப்படத்தை காண ரசிகர்கள் முண்டியடித்து டிக்கெட்டுகள் முன்பதிவு செய்துள்ளனர். தமிழகம் முழுவதும் முதல் காட்சியாக நள்ளிரவு 1 மணிக்கு தியேட்டர்களில் துணிவு திரைப்படம் வெளியானது. இந்நிலையில், சென்னை கோயம்பேட்டில் உள்ள ரோகினி திரையரங்கு முன்பு துணிவு கொண்டாட்டத்தின் போது சாலையில் சென்ற லாரி மீது ஏறி நின்று நடனமாடிய போது எதிர்பாரத விதமாக அஜித் ரசிகர் 19 வயது பரத்குமார்  தவறி ரோட்டில் விழுந்தார்.

வாரிசு துணிவு

இதனால் முதுகு தண்டில் பலத்த காயம் ஏற்பட்டு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டார். அவர்  சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன.  சிந்தாதிரிபேட்டையில் வசித்து வரும் பரத்குமார் விபத்தில் உயிரிழந்தது பெரும் சோகத்தையும், பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது. இந்த விபத்து குறித்து காவல்துறையினர்  வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு  வருகின்றனர்.

மார்கழி மாத விரத முறைகள், வழிபாடு, பலன்கள்!

அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

சபரிமலை போறீங்களா?! 60 நாட்களுக்கு உணவு, தங்குமிடம் எல்லாமே இங்கே ஃப்ரீ தான்!!

From around the web