'துணிவு’ வசூல் சாதனை! ரூ.100 கோடி வசூல் க்ளப்பில் இணைந்தது!

 
அஜித் துணிவு

பல வருடங்களுக்குப் பிறகு அஜித், விஜய் ரசிகர்களுக்கு இந்த பொங்கல் திருவிழா தல, தளபதி பொங்கலாக மலர்ந்திருக்கிறது. ‘துணிவு’, வாரிசு என இருவரின் படங்கள் ஒரே நாளில் ரிலீஸாகி ரசிகர்களுக்கு விருந்து படைத்தாலும், விஜய்யின் வாரிசு, பொதுமக்களை அதிகளவில் கவரவில்லை என்கிறார்கள். விஜய் நீ..ண்ட நாட்களுக்குப் பின்னர் நடித்திருக்கும் குடும்ப செண்டிமெண்ட் படம் கை கொடுக்கவில்லை.

ஷாம் எல்லாம் விஜய்க்கு வில்லன்.. முகத்துல ஒரு எக்ஸ்பிரஷனுமே இல்லை என்று தியேட்டரில் 10 வயசு பொண்ணு புலம்பிக் கொண்டிருந்ததைக் கேட்க முடிந்தது. இன்றைய யூத்களின் கணிப்பும், களிப்பும் வேறாக இருக்கிறது.

வாரிசு துணிவு

சரி.. அஜித்தின் துணிவு நிலவரம் என்ன? ரிலீஸாகி 4ம் நாளின் வசூல் ரூ.100 கோடியைத் தாண்டி சாதனைப் படைத்துள்ளது. விஜய்யின் வாரிசும் கலெக்‌ஷனில் குறை வைக்காமல் ரூ.100 கோடி க்ளப்பில் இணைந்துள்ளது. இந்த இரு படங்களில், முதன் முதலாக ரூ. 100  கோடி க்ளப்பைத் தொட்ட படம் விஜய்யின் ‘வாரிசு’ தான் என்றாலும், அதிகளவில் ரசிக்கப்பட்ட படமாக ‘துணிவு’ அமைந்திருக்கிறது.

சரி.. சினிமாவை அப்படியே கொஞ்சம் ஓரமாக வைத்து விட்டு சிந்திப்போம்.. அஜித், விஜய் என்றில்லாமல் அதன் பிறகும் பட்டங்களைச் சேர்த்துக் கொள்ளும் விஷால், பரத் வகையறா நடிகர்கள் கூட, தமிழ், தமிழர்கள் என்று பொதுநலன் பேசுகிறார்கள். மக்களின் நலன் என்று பேட்டி கொடுக்கிறார்கள்.

தமிழகத்தில் ஏற்கெனவே அரசியல்வாதிகள் கட்டுகிற கொடிகள், நட்டுகிற கொடி கம்பங்கள், வைக்கிற விளம்பர பேனர்கள் பல உயிர்களைக் காவு வாங்கியிருக்கிறது. நீதிமன்றமும் பேனர் வைக்கவும், பொது இடத்தில் அனுமதியில்லாமல் கொடி கம்பங்கள் நட்டு வைக்கவும் தடை விதித்திருக்கிறது.

துணிவு

இந்த ஸ்டார் நடிகர்கள் ஒருவர் கூட ஏன், எங்கள் படத்துக்கு பேனரோ, பாலாபிஷேகமோ வைக்காதீங்க என்று அறிக்கை விட மறுக்கிறார்கள். உண்மையில் ரசிகர்கள் மேல் அன்பும், அக்கறையும் இருந்தால், இதை ஏதாவது ஒரு நடிகராவது தங்களின் பட ரிலீஸின் போது சொல்லலாமே?

எந்த நடிகருமே இதற்கு விதிவிலக்கில்லை... அகரம் வைத்து ஒழுக்கத்தைக் கற்று தருகிற நடிகர் சூர்யா, கார்த்தி உட்பட அனைவருமே இந்த கட்-அவுட், பேனர் கலாசாரத்திற்கு எதிராக குரல் கொடுக்கவில்லை.

ஒவ்வொரு பட ரிலீஸின் போதும், 50 அடி.. 60 அடி.. 100 அடி என்று இவர்களின் அலப்பறைகள் அதிகமாகி கொண்டே தான் போகிறது. என்று விடியுமே இந்த விளம்பர கலாசாரம்? 

வாழ்நாள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

2023 இந்த 6 ராசிகளுக்கு அதிர்ஷ்டம் அலைமோதும்! பயன்படுத்திக்கோங்க

From around the web