மாடுபிடிவீரர்களே தயாரா ?! ஜல்லிக்கட்டில் கலந்து கொள்ள பரிசோதனை கட்டாயம்!!

 
கொரோனா பரிசோதனை

தமிழர் பண்டிகையாம் பொங்கல் பண்டிகைக்கு ஒவ்வொரு வருடமும்   ஜல்லிக்கட்டு போட்டிகள் நடத்தப்படுவது வழக்கம். குறிப்பாக  மதுரையில் அவனியாபுரம், பாலமேடு, அலங்காநல்லூரில் நடைபெறும் ஜல்லிக்கட்டுப்  போட்டிகள் உலக பிரசித்தி பெற்றவை. இதில் அவனியாபுரம் ஜல்லிக்கட்டு போட்டி 15ம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

ஜல்லிக்கட்டு

இந்நிலையில் தமிழக அரசு ஜல்லிக்கட்டு போட்டிகளை நடத்த வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டுள்ளது. அதன்படி கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மாடுபிடி வீரர்கள் மற்றும் மாட்டின் உரிமையாளர்கள்   கொரோனா பரிசோதனை அல்லது 2  தவணை தடுப்பூசி செலுத்த வேண்டியது  கட்டாயம் என அறிவித்தது.

ஜல்லிக்கட்டு

இதன் அடிப்படையில் அவனியாபுரம் ஆரம்ப சுகாதார நிலையத்தில்  மாடுபிடி வீரர்கள் மற்றும் மாட்டின் உரிமையாளர்களுக்கு கொரோனா பரிசோதனை நடைபெற்று வருகிறது.  கொரோனா பரிசோதனை அல்லது 2 தவணை தடுப்பூசி சான்றிதழ் இல்லாதவர்கள் இந்த போட்டியில் கலந்து கொள்ள அனுமதி இல்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

சபரிமலை போறீங்களா?! 60 நாட்களுக்கு உணவு, தங்குமிடம் எல்லாமே இங்கே ஃப்ரீ தான்!

From around the web