க்யூட் வீடியோ!! அரசுப்பள்ளி மாணவர்களுக்கு ஆங்கிலப் பாடம் எடுத்த தனுஷ் பட நாயகி !!

 
நித்யா மேனன்


 தனுஷ், விஜய், துல்கர் சல்மான் என முண்ணனி கதாநாயகர்களுடன் நடித்த பிரபல நடிகை நித்யா  அரசுப்பள்ளியில் மாணவர்களுக்கு பாடம் சொல்லித்தருகிறார். இது குறித்த வீடியோ சமூக வலைதளங்களில் பெரும் வைரலாகி வருகிறது. ஒவ்வொரு ஆண்டும் திருப்பதி மாவட்டத்தில் செயல்பட்டு வரும் கல்கி பகவான் ஆசிரமத்திற்கு வருகை தருவதை வழக்கமாக வைத்திருக்கிறார் நடிகை நித்யா மேனன்.


அந்த வகையில் நடப்பாண்டிலும் ஆந்திரா மாநிலத்தின் திருப்பதி மாவட்டம் கிருஷ்ணாபுரம் கிராமத்தில் உள்ள பழங்குடியினர் பகுதியில் அமைந்துள்ள ஆசிரமத்திற்கு சென்றார். பின்னர் அங்குள்ள  அரசு தொடக்கப் பள்ளிக்கு சென்று படித்து கொண்டிருந்த மாணவர்களிடம் உரையாடினார். சிறிது நேரத்தில் அந்த மாணவர்களுக்கு ஆங்கிலப்பாடம் சொல்லிக் கொடுக்கத் தொடங்கினார்.

திருச்சிற்றம்பலம்

அந்த  வீடியோ தான் தற்போது சமூக வலைதளங்களில் பெரும்  வைரலாகி வருகிறது. வீடியோவை பார்த்த பலரும் க்யூட் டீச்சர், அழகு, அருமை என பதிவிட்டு வருகின்றனர். தமிழில் தனுஷ், பாரதிராஜாவுடன் நடித்த திருச்சிற்றம்பலம் படத்தின் வெற்றிக்கு பிறகு அறம்திருக்கல்பனை படத்தில் நடித்து வருகிறார். இந்த திரைப்படத்திற்கான படப்பிடிப்பு விறு விறுப்பாக நடைபெற்று வருவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. 

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

2023 இந்த 6 ராசிகளுக்கு அதிர்ஷ்டம் அலைமோதும்! பயன்படுத்திக்கோங்க