க்யூட் வீடியோ!! பட்டப்பகலில் யானை செய்த பொறுப்பான செயல்!!

 
யானை

மனிதர்களை விட விலங்குகளிடம் நல்ல பல பண்புகளை கற்றுக் கொள்ளலாம். அவற்றின் பொறுப்பு பலருக்கு பாடம் தான் . நாம் தான் போகிற போக்கில் பார்த்துவிட்டு செல்கிறோம். அவைகளின் செயல்களை கூர்ந்து கவனித்தால் பல செயல்கள் நம் வாழ்க்கைக்கு பயனுள்ளவையே என்பது விளங்கும். அந்த வகையில் வீட்டு விலங்கான நாய் , பூனை  மட்டுமல்ல காட்டு விலங்குகளான  குரங்கு, யானை, பாம்பு இவைகளும் உணர்வுப்பூர்வமான செயல்பாடுகளை உடையவை.  அதே போல் மிகமிக க்யூட்டான வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் தற்போது வைரலாகி வருகிறது.  அதில் யானை தனது தும்பிக்கையால் குப்பைகளை எடுத்து குப்பைத் தொட்டியில் போடுவது காண்பவர்களை கவர்கிறது . 


இந்த புத்திசாலி யானையின் பல வீடியோக்கள் ட்விட்டரில் பதிவிடப்பட்டுள்ளன. இந்த வைரல் வீடியோவில், தூய்மையின் அவசியத்தை எடுத்துக் காட்டுகிறது.  யானை தரையில் இருந்து குப்பை காகிதத்தை எடுத்து குப்பைத் தொட்டியில் போடுவதைக் காண முடிகின்றது. வீடியோவைப் பார்த்த பிறகு, விதிகளைப் பின்பற்றுவதிலும், சுற்றுப்புறத்தை சுத்தமாக வைத்திருப்பதிலும் மனிதர்களை விட விலங்குகள் சிறந்தவை எனக் கூறலாம்.  இந்த வீடியோவை லட்சக்கணக்கானோர் பார்த்தும் , பகிர்ந்தும் உள்ளனர். பயனர்களை  மீண்டும், மீண்டும் பார்க்கத் தூண்டுகிறது. யானையின் செயல் அந்த அளவிற்கு ஆச்சரியம் அளிக்கக்கூடிய வகையில் உள்ளதாக நெட்டிசன்கள் தெரிவித்துள்ளனர்.


இந்த வீடியோவில், யானை ஒன்று தரையில் கிடக்கும் குப்பைகளை  தனது கால் மற்றும் தும்பிக்கையின் உதவியுடன் எடுத்து அதை அழகாக தொட்டியில் போடுகிறது. ஒரு காகிதம் கீழே விழுந்து விடுகிறது. ஒவ்வொரு முறை கீழே விழும்போதும், அதை அப்படியே விட்டு விடாமல், மீண்டும் மீண்டும் முயற்சி செய்து அதையும்  எடுத்து தொட்டியில் போடுவது கொள்ளை அழகு. கிரேட்டர் க்ரூகர் தேசிய பூங்காவில் உள்ள ஒரு சஃபாரி போஸ்டில் யானை குப்பைகளை கொட்டும் இந்த சிசிடிவி காட்சி பதிவு செய்யப்பட்டது. தற்போது இந்த வீடியோ சமூக வலைதளங்களில் பெரும் வைரலாகி வருகிறது. 

சபரிமலை போறீங்களா?! 60 நாட்களுக்கு உணவு, தங்குமிடம் எல்லாமே இங்கே ஃப்ரீ தான்!!

அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

மப்பேறி தள்ளாடும் நாய்!! மதுவை குடித்ததால் பரிதாபம்!!

From around the web