அடப்பாவிங்களா!! பொம்மைக்கே இந்த கதியா?! தலையே இருக்க கூடாது!! அதிரடி உத்தரவு!!

 
பெண் பொம்மைகள்

ஆப்கானிஸ்தானில் தாலிபான்கள் பொறுப்பேற்ற பிறகு பெண்களுக்கு எதிரான கட்டுப்பாடுகள் அதிகம் விதிக்கப்பட்டு வருகின்றன. 2021 ஆகஸ்ட் 15 முதல் தலிபான்கள் 2ம் முறை ஆட்சியை கைப்பற்றினர். இதற்கு முன்பு 1996 முதல் 2001 வரை ஆப்கனை தாலிபான்கள் ஆட்சி செய்தனர். அவர்கள் பொறுப்பேற்றுக் கொண்ட பிறகு  மதத்தின் அடிப்படையில் பெண்களுக்கு எதிராக கடும் கட்டுப்பாடுகளை அமல்படுத்தி வருகின்றனர். பெண்கள் தனியாக வெளியில் செல்லக் கூடாது. ஆண்கள் துணையுடன் தான் செல்ல வேண்டும் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் நடிக்க கூடாது. ஆண் மருத்துவரிடம் மருத்துவம் செய்து கொள்ள கூடாது.

பெண் பொம்மைகள்

கல்லூரிகளில் படிக்க அனுமதி கிடையாது என பல கட்டுப்பாடுகள். தினம் தினம் இந்த கட்டுப்பாடுகள் கடுமையாக்கப்பட்டு வருகின்றனர். இதனால் அங்கு வசிக்கும் பெண்கள் பெரும் இன்னல்களை சந்தித்து வருவதாகவும் இதனை தாலிபான்கள் பரிசீலிக்க வேண்டும் என உலக நாடுகள் குரல் எழுப்பி வருகின்றன. இருந்தபோதிலும் அவர்களின் அட்டகாசங்களுக்கு பஞ்சமில்லை. பர்தா அணியாமல் வெளியே நடமாடத் தடை, உயர்கல்வி மேற்கொள்ள தடை, வாகன லைசென்ஸ் பெற தடை  அந்த வகையில் தற்போது அதிரடியாக  ஜவுளிக்கடைகளில்  பார்வைக்கு வைக்கப்படும் பெண் பொம்மைகளில் முகத்தை மறைத்துதான் காட்சிப்படுத்த வேண்டும் என உத்தரவு பிறப்பித்துள்ளனர். பொதுவாக ஜவுளி கடைகளில் ஆளுயர பொம்மைகள் புதிய டிசைன் ஆடைகளுடன் பொதுமக்களை கவரும் வகையில் வைக்கப்பட்டு இருக்கும். இந்த பொம்மைகளுக்கு தலைகளே  இருக்கக் கூடாது . தலையுடன் கூடிய பொம்மைகள் வைப்பது இஸ்லாமிய வழக்கத்திற்கு எதிரானது.

பெண் பொம்மைகள்

இதனால் தலையில்லாமல்தான் பொம்மைகள் இருக்க வேண்டும் என புதிய உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அதன்படி தற்போது ஜவுளிக்கடைகளில் உள்ள பெண் பொம்மைகளின் முகங்களை கருப்பு நிறத்திலான கவர், துணி கொண்டு  மூடி வைக்கப்பட்டுள்ளன. இதனை மீறுவோர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. 
இதுகுறித்து காபூலில் உள்ள ஜவுளிக்கடைக்காரர் கூறுகையில், “தற்போது பொம்மைகளின் முகத்தை மறைக்க கூறியுள்ளனர். இது பரவாயில்லை. ஏனென்றால் இதற்கு முன்பு பொம்மைகள் வைக்க கூடாது எனவும், தலை இருந்தால் அதனை வெட்டியும் அகற்றினர். அந்த உத்தரவை ஒப்பிடும்போது இது பரவாயில்லை” என கூறியுள்ளார்.  
சாரா வஹேதி என்ற ஆப்கானிய மனித உரிமை ஆர்வலர் தனது ட்விட்டர் பக்கத்தில் “பெண்கள் மீதான தலிபான்களின் வெறுப்பு உயிருக்கு அப்பாற்பட்டது. பொம்மைளின் முகத்தை கூட மறைக்க கடை உரிமையாளர்களுக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. பொம்மைகளுக்கே இந்த நிலைமை என்றால் வரும் காலத்தில் ஆப்கானிஸ்தான் பெண்களின் வாழ்க்கை எவ்வளவு மோசமாக மாறப்போகிறது என்பதை நினைத்து பார்க்க வேண்டும். பெண்களின் வாழ்க்கை மோசமாகும் என்பதற்கான அறிகுறியாக தான் இது இருக்கும்” என தெரிவித்துள்ளார். தாலிபான்களின் இந்த உத்தரவிற்கு உலகம் முழுவதிலும் இருந்து கடும் எதிர்ப்புக் குரல்கள் எழும்பியுள்ளன. பல்வேறு விமர்சனங்களும் எழுந்து வருகின்றன.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

2023 இந்த 6 ராசிகளுக்கு அதிர்ஷ்டம் அலைமோதும்! பயன்படுத்திக்கோங்க

From around the web