அடப்பாவமே!! 54 பயணிகளை விட்டுவிட்டு லக்கேஜ்களுடன் பறந்த விமானம்!! திகைத்த விமானப் பயணிகள்!!

 
கோ ஃபர்ஸ்ட்

விமானப் பயணங்களில் சமீபகாலமாக பல வகையான அட்ராசிட்டி அமர்க்களங்கள் நடந்து வருகின்றன . போதையில் அருகில் இருந்தசக பெண் பயணி மீது சிறுநீர் கழித்தது, நடுவானில் இரு பயணிகள் கட்டிப்புரண்டு சண்டை,  சிறுமியிடம் இளைஞர் அத்துமீறல் என கடந்த 2 வாரங்களாக தொடர் அதிர்ச்சி சம்பவங்கள் அரங்கேறி வருகின்றன. அதற்கு சற்றும் குறையாத மற்றொரு சம்பவம்  நடைபெற்றுள்ளது. பெங்களூரு விமான நிலையத்தில் இருந்து காலை 6.30க்கு  கோ ஃபர்ஸ்ட் ஜி8 116 விமானம் டெல்லி செல்லும்.  வழக்கம் போல் வந்த விமானம்  விமானம் போர்டிங் பாஸ்களுடன் காத்திருந்த 54 பயணிகளை விட்டு விட்டு அவர்களுடைய லக்கேஜ்களுடன் புறப்பட்டு சென்றது. இதனால் விமானப் பயணிகள் பெரும் மன அழுத்தத்திற்கு ஆளாகியுள்ளனர்.  இதனால் அங்கு பெரும் குழப்பம் நிலவியது. இதுகுறித்து பயணிகள் தங்களுடைய டுவிட்டர் பக்கத்தில் கடும் அதிருப்தி தெரிவித்துள்ளனர். இந்த விமானத்தில் பயணம் செய்ய இருந்த  விமானப் பயணி ஒருவர் பெங்களூரு விமான நிலையத்தில் பெருங்குழப்பம் நிலவுவதாக டுவிட்டரில் வீடியோ ஒன்றை பகிர்ந்திருந்தார். 

கோஃபர்ஸ்ட்
அதில்  "பெங்களூரு-டெல்லி செல்லும் கோ ஃபர்ஸ்ட் ஜி8 116 விமானம் 54 பயணிகளை விமான நிலையத்தில் விட்டுவிட்டு லக்கேஜ்களை மட்டும் எடுத்து கொண்டு விமானம்  புறப்பட்டு சென்று விட்டது  எனத் தெரிவித்திருந்தார். இந்த பதிவு நாடு முழுவதும் பெரும் சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில் விமான நிர்வாகம் இந்த சமயத்தில் பணியில் ஈடுபட்ட அனைத்து ஊழியர்களும் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளது. மேலும்  பாதிக்கப்பட்ட பயணிகளிடம் பகிரங்க மன்னிப்பு கேட்பதாகவும், அடுத்த 12 மாதத்திற்கு பாதிக்கப்பட்ட பயணிகளுக்கு உள்நாட்டில் பயணம் செய்ய டிக்கெட் இலவசம் எனவும் கவர்ச்சிகரமான அறிவிப்பையும் வெளியிட்டுள்ளது.


இச்சம்பவம் குறித்து  மத்திய விமானப் போக்குவரத்து துறை அமைச்சகம் கோஃபர்ஸ்ட் நிறுவனத்திடம் விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பியுள்ளது. அத்துடன்  நிறுவன அதிகாரிகளிடம் தொலைபேசியில் பேசினர். இதன்பிறகு  அந்த பயணிகள் வேறு விமானத்தில் காலை 10 மணிக்கு அனுப்பி வைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

மார்கழி மாத விரத முறைகள், வழிபாடு, பலன்கள்!

அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

சபரிமலை போறீங்களா?! 60 நாட்களுக்கு உணவு, தங்குமிடம் எல்லாமே இங்கே ஃப்ரீ தான்!!

From around the web