வாரிசு, துணிவை தட்டித் தூக்கிய டாஸ்மாக்!! பொங்கலுக்கு ரூ1000கோடிக்கு மேல் மதுவிற்பனை!!

தமிழக அரசுக்கு அதிக வருவாய் ஈட்டி தருவதில் முண்ணனியில் இருந்து வரும் டாஸ்மாக் நிர்வாகத்தின் தினசரி வருமானம் ரூ85 கோடி. இந்தவருமானம் சாதாரண நாட்களில் மட்டுமே. பண்டிகைகள் , விழாக்காலங்கள், விடுமுறை தினங்களில் இதன் வருமானம் 2 அல்லது 3 மடங்கு அதிகரிக்கும். பண்டிகையை விட அதிகமாக கொண்டாடுவது மதுக்கடைகளை தான் என்கின்றனர் சமூக நல ஆர்வலர்கள்.
டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை தினங்கள் அறிவிக்கப்பட்டால் முதல் நாளே மதுபாட்டில்களை வாங்கி ஸ்டாக் வைத்துக் கொள்கின்றனர். இதனால் பண்டிகைக்கு முதல் நாளில் டாஸ்மாக் கடைகளில் கூட்டம் அலைமோதும். தீபாவளி, பொங்கல், புத்தாண்டு என பண்டிகை காலங்களில் வருமானம் அதிகரிக்கும். இந்த ஆண்டு பொங்கல் பண்டிகை அரசு விடுமுறை நாட்களான சனி, ஞாயிறுக்கிழமைகளில் வந்ததால் வழக்கமான வார இறுதி விற்பனையும் சேர்ந்து கொண்டது.
இந்த ஆண்டு பொங்கல் பண்டிகை மது விற்பனை ஜனவரி 13 முதல் சனி, ஞாயிறுகளிலும் அதிகளவு விற்பனை ஆகியுள்ளதாக டாஸ்மாக் நிர்வாகம் தெரிவித்துள்ளது. பொங்கலுக்கு வெளியான வாரிசு, துணிவு திரைப்பட வசூலை மிஞ்சிய வசூலாக இருந்ததாக நிர்வாகம் அறிவித்துள்ளது.ஜனவரி 14ம் தேதி சனிக்கிழமை ரூ.250 கோடி, ஜனவரி 13ம் தேதி வெள்ளிக்கிழமை ரூ.150 கோடி , ஜனவரி 15ம் தேதி ஞாயிற்றுக்கிழமை ரூ.450 கோடிக்கும் அதிகமாக இருந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இன்று காணும் பொங்கல் பண்டிகைக்கு அதைவிட அதிகமாக இருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.பொங்கல் பண்டிகைக்கு ஒட்டுமொத்த மதுவிற்பனை சுமார் ரூ1000 கோடிக்கும் அதிகமாக இருந்திருக்கலாம் எனத் தெரிகிறது. ஒவ்வொரு வருடமும் டாஸ்மாக் வசூல் அதிகரித்து வருவது பெரும் கவலையையும், அதிர்ச்சியையும் அளிப்பதாக சமூக ஆர்வலர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!
சபரிமலை போறீங்களா?! 60 நாட்களுக்கு உணவு, தங்குமிடம் எல்லாமே இங்கே ஃப்ரீ தான்!