முன்னாள் ஊராட்சி மன்ற தலைவரின் மருமகள் இரும்பு ராடால் அடித்து கொலை!! பகீர் பிண்ணனி!!

 
ரம்யா

திருவள்ளூர் மாவட்டம் ஊத்துக்கோட்டை கன்னிகைப்பேர் பகுதியில் வசித்து வருபவர் பாலு. இவர்  முன்னாள் திமுக ஒன்றிய செயலாளராகவும், ஊராட்சி மன்ற தலைவராகவும் இருந்தவர். இவர், கடந்த 2013ல்  பெட்ரோல் குண்டு வீசி படுகொலை செய்யப்பட்டார். இவரது தம்பி சத்தியவேலுவுக்கும்  திராவிடபாலு குடும்பத்துக்கும் இடையே கடந்த சில ஆண்டுகளாகவே தகராறு இருந்து வந்தது. இதில்  திராவிடபாலுவின் மனைவி செல்வி, மகன் முருகன், மருமகள் ரம்யா,  பேரன் கருணாநிதி 4 பேரும் கன்னிகைப்பேர் பகுதியில் தனியே வசித்து வந்தனர்.

கட்டையால் அடித்து கொலை
புத்தாண்டு தினத்தில் இரவு  10 மணிக்கு சத்தியவேலு மகன் புவன்குமார்  திராவிடபாலுவின் வீட்டுக்கு சென்று வீட்டில் இருந்த பெரியம்மா செல்வி, அண்ணன் முருகன், அண்ணி ரம்யா, அவரது மகன் கருணாநிதி  4 பேரையும் இரும்பு ராடால் சரமாரியாக தாக்கத் தொடங்கினார். இந்த தாக்குதலில் நிலைகுலைந்த 4 பேரும்  படுகாயமடைந்து ரத்த வெள்ளத்தில் அலறியபடி மயங்கி சரிந்தனர். அலறல் சத்தம் கேட்டு ஓடி வந்த அக்கம் பக்கத்தினர்  படுகாயமடைந்த 4 பேரையும் அக்கம் பக்கத்தினர் மீட்டு, அங்குள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதித்தனர்.அதற்குள் புவன்குமார் தப்பி ஓடி விட்டார். தலையில் படுகாயமடைந்த ரம்யா மருத்துவமனை கொண்டு செல்லும் வழியிலேயே உயிரிழந்து விட்டார்.  

தந்தையை கொலை செய்த மகன்!! திடுக்கிடும் பரபரப்பு வாக்குமூலம்!!

படுகாயமடைந்த ரம்யாவின் கணவர் முருகன், செல்வி, கருணாநிதி கவலைக்கிடமான நிலையில்  ராஜிவ்காந்தி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர்.இச்சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்து ரம்யாவின் சடலத்தை கைப்பற்றி, காவல்துறையினர்  பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். தப்பியோடிய புவன்குமாரை கைது செய்து தீவிர விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்த விசாரணையில் இரு குடும்பத்துக்கு இடையே சொத்து தகராறு காரணமாக கொலை நிகழ்ந்ததா அல்லது வேறு ஏதேனும் காரணம் உள்ளதா என பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. தொடர்ந்து அப்பகுதியில் பதற்றம் நிலவி வருவதால் அசம்பாவிதங்கள் நடைபெறாத வகையில் காவல்துறையினர்  பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

மார்கழி மாத விரத முறைகள், வழிபாடு, பலன்கள்!

அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

சபரிமலை போறீங்களா?! 60 நாட்களுக்கு உணவு, தங்குமிடம் எல்லாமே இங்கே ஃப்ரீ தான்!!

From around the web