தமிழகம் முழுவதும் ஜனவரி 5ம் தேதி ஆர்ப்பாட்டம்!! ஜாக்டோ ஜியோ அதிரடி !!

 
ஜாக்டோஜியோ


தமிழகம் முழுவதும் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள், ஓய்வூதியதாரர்கள் ஒன்றிணைந்து ஜாக்டோ  ஜியோ அமைப்பை ஏற்படுத்தியுள்ளனர். இந்த அமைப்பின் மூலம் அரசு ஊழியர்களுக்கான நலத்திட்ட உதவிகள், கோரிக்கைகள், குறைபாடுகள் குறித்து விரிவாக ஆராயப்பட்டு தீர்வு காணப்பட்டு வருகிறது.

ஜாக்டோஜியோ

இந்த அமைப்பு கடந்த சில ஆண்டுகளாக ஓய்வூதியதாரர்கள் புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்து பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என பல்வேறு அமைப்புக்கள் வலியுறுத்தி வருகின்றன. இது குறித்த  ஜாக்டோ ஜியோ மாநில ஒருங்கிணைப்பாளர்கள் கூட்டம் சென்னையில் நேற்று நடத்தப்பட்டது. இதனையடுத்து ஜாக்டோ ஜியோ ஒருங்கிணைப்பாளர்கள் செய்திக்குறிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளனர். 


ஜாக்டோ ஜியோ அமைப்பின் கோரிக்கைகள்

தொடர் போராட்டம்
புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்து பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும். 
அங்கன்வாடி, சத்துணவு ஊழியர்களுக்கு விடுமுறை கால ஊதியம் வழங்க வேண்டும். 
இடைநிலை ஆசிரியர்களுக்கு ஒரே மாதிரியான ஊதியம் வழங்கப்பட வேண்டும். 
 மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி மற்றும் அரசு துறைகளில் அரசாணை 115, 139, 152-ஐ ரத்து செய்ய வேண்டும்.
 'அவுட்சோர்சிங்' முறையை கைவிட வேண்டும்
6 லட்சம் காலிப் பணியிடங்கள் நிரப்பப்படவேண்டும். 
போன்ற  கோரிக்கைகளை வலியுறுத்தி ஜனவரி 5ம் தேதி தமிழகம் முழுவதும் ஆட்சியர் அலுவலகம் முன்பு கவனஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 

மார்கழி மாத விரத முறைகள், வழிபாடு, பலன்கள்!

அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

சபரிமலை போறீங்களா?! 60 நாட்களுக்கு உணவு, தங்குமிடம் எல்லாமே இங்கே ஃப்ரீ தான்!!

From around the web