நாளை 4 மணி நேரம் பக்தர்களுக்கு அனுமதி கிடையாது!! திருப்பதி தேவஸ்தானம் அதிரடி!!

 
திருப்பதி விரைவு தரிசன டிக்கெட் பெற புதிய நடைமுறை!!

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் தினமும் திருவிழாக்களும், உற்சவங்களும் நடைபெறும். ஆண்டுமுழுவதும் திருமணமும், விழாக்களும், பண்டிகைகளும் களைகட்டும். அந்த வகையில்  தற்போது மார்கழி மாதம். இந்த மாதத்தில் பல உற்சவங்கள் நடைபெற்றாலும் சிகர நிகழ்ச்சியான   வைகுண்ட ஏகாதசி விழா வெகுசிறப்பாக நடத்தப்படும். இதனை நேரில் காணவும், ஏழுமலையானை தரிசிக்கவும்  லட்சக்கணக்கான பக்தர்கள் திருப்பதியில் குவியத் தொடங்குவர். இதற்கான சிறப்பு ஏற்பாடுகளை திருப்பதி தேவஸ்தானம் செய்து வருகிறது. 

இவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும்!! திருப்பதி தேவஸ்தானம் எச்சரிக்கை!!

கடந்த 2 ஆண்டுகளாக கொரோனா காரணமாக இந்த விழாக்கள் பக்தர்கள் அனுமதியின்றி நடத்தப்பட்டன. அந்த வகையில் நடப்பாண்டிற்கான  வைகுண்ட ஏகாதசி பகல்பத்து உற்சவம் நேற்று முதல் தொடங்கியுள்ளது. இதனைத்  தொடர்ந்து ஜனவரி 2ம் தேதி வைகுண்ட ஏகாதசி  நாள் முதல் 10 நாட்கள் திருப்பதி ஏழுமலையான் கோவிலில் சொர்க்கவாசல் திறந்திருக்கும். இந்த 10 நாட்களுக்கு தினமும் 25000 டிக்கெட்டுகள் வீதம் 2.5 லட்சம் டிக்கெட்டுகள் வெளியிடப்பட்டுள்ளன. இன்று டிசம்பர் 27ம் தேதி செவ்வாய்கிழமை ஆழ்வார் திருமஞ்சனம் நடைபெறும்.  அன்று கோவில் வளாகம் முழுவதும் சுத்தம் செய்யப்படும் .

திருப்பதி

இதனால்  நாளை   காலை 6 மணி முதல் 10 மணி வரை பக்தர்களுக்கு அனுமதி கிடையாது. கருவறை, ஆனந்த நிலையம், கொடிமரம், யோக நரசிம்ம சுவாமி, வகுலமாத, பாஷ்யகாரல சன்னதிகள், சம்பங்கி மண்டபம், ரங்கநாதர் மண்டபம், மகாதுவாரம் என அனைத்து இடங்களும் தூய்மைபடுத்தும் பணிகள் நடைபெறும்.பின்னர் பச்சை கற்பூரம், மஞ்சள், கிச்சலிகட்டை உட்பட பல்வேறு மூலிகை பொருட்கள் கொண்டு தயார் செய்யப்பட்ட கலவை கோயில் முழுவதும் தெளிக்கப்படும். கோயில் ஆழ்வார் திருமஞ்சனத்தையொட்டி, தரிசனத்திற்கு பக்தர்கள் அனுமதிக்கப்படுவது நிறுத்தப்பட உள்ளது. 11 மணிக்கு மேல் வழக்கம் போல் பக்தர்கள் தரிசனத்திற்காக அனுமதிக்கப்படுவார்கள் என தேவஸ்தானம் அறிவித்துள்ளது

 இந்நிலையில், திருப்பதியில் வரும் ஜன.1 முதல் 11 வரை சிறப்பு தரிசனம் செய்ய முன்பதிவு அவசியம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன் முன்பதிவு செய்பவர்களுக்கு கொரோனா தடுப்பூசி சான்றிதழ் அவசியம் எனவும் திருப்பதி தேவஸ்தானம் தெரிவித்துள்ளது. ரூ.300 டிக்கெட் பெறும் பக்தர்களும்  தடுப்பூசி சான்றிதழை சமர்ப்பிக்க வேண்டும் . 2 டோஸ் தடுப்பூசி போடாதவர்கள் கொரோனா பாதிப்பு இல்லை என்ற சான்றிதழை தரிசனத்துக்கு வரும்போது கொண்டு வர வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மார்கழி மாத விரத முறைகள், வழிபாடு, பலன்கள்!

அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

சபரிமலை போறீங்களா?! 60 நாட்களுக்கு உணவு, தங்குமிடம் எல்லாமே இங்கே ஃப்ரீ தான்!!

From around the web