பக்தர்களே உஷார்!! கற்பூரம் ஏற்றினால் 3 ஆண்டு சிறை!!

 
ஐயப்பன்

கார்த்திகை மாதத்தில்  ஐயப்ப பக்தர்கள் மாலையணிந்து விரதம் இருந்து கேரளாவில் அமைந்திருக்கும் சபரிமலை செல்வது வழக்கம்.  மண்டல பூஜைக்காக தற்போது சபரிமலை நடை திறக்கப்பட்டுள்ளது. டிசம்பர் 27ம் தேதி வரை தொடர்ந்து திறக்கப்பட்டு பூஜைகள் நடத்தப்படும் . இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் இருந்து லட்சக்கணக்கான ஐயப்ப பக்தர்கள் சபரிமலைக்கு ரயில்களில் செல்கின்றனர். அப்படி செல்லும் போது தாம் இருக்கும் இடத்திலேயே பக்தர்கள் அதிகாலையில் எழுந்து குளித்து  வழிபாடு நடத்துகின்றனர்.

சபரிமலை

அத்துடன் கற்பூரம் மற்றும் விளக்கு ஏற்றியும் வழிபாட்டை தொடர்கின்றனர். ரயிலில் பயணம் செய்யும்போதும் இதனை செய்வதால் பெரும் ஆபத்துக்கள் நிகழ்ந்துவிடக்கூடும். இதன் அடிப்படையில் ரயில்வே நிர்வாகம் எச்சரிக்கை பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதன்படி  இந்தியா முழுவதும் பல்வேறு பகுதிகளில் இருந்து ஐயப்ப பக்தர்கள் சபரிமலை செல்கின்றனர். இவர்கள் ரயிலிலேயே குளித்து அங்கேயே கற்பூரம் விளக்கும் ஏற்றி விடுகின்றனர்.

சபரிமலை கோயில் வருமானம் 9 மடங்கு அதிகரிப்பு..!

இதனால் அசம்பாவிதங்கள் ஏற்பட்டு விடலாம் . இது குறித்த விழிப்புணர்வுகள் ஏற்படுத்தப்பட்ட போதிலும் பக்தர்கள் இதனை தொடர்ந்து செய்வதால்  ரயில்வே போலீசார் தீவிரமாக கண்காணிப்பில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.  மேலும், ரயில்களில் கற்பூரம் மற்றும் விளக்கு ஏற்றினால் 3  ஆண்டுகள் வரை சிறையும், அபராதமும் விதிக்கப்படும் என எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது. 

சபரிமலை போறீங்களா?! 60 நாட்களுக்கு உணவு, தங்குமிடம் எல்லாமே இங்கே ஃப்ரீ தான்!!

அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

மப்பேறி தள்ளாடும் நாய்!! மதுவை குடித்ததால் பரிதாபம்!!

From around the web