தோனி ஸ்டைலில் திடீரென ஓய்வை அறிவித்தாரா தினேஷ் கார்த்திக்!?

 
தினேஷ் கார்த்திக்

தல தோனி ஸ்டைலில் இன்ஸ்ட்ராகிராமில் வீடியோ வெளியிட்டு தனது ஓய்வை தினேஷ் கார்த்திக் அறிவித்துள்ளதாக கிரிக்கெட் ரசிகர்கள் குழம்பி போயுள்ளனர். தமிழகத்தைச் சேர்ந்த இந்திய கிரிக்கெட் அணியின் விக்கெட் கீப்பர் தினேஷ் கார்த்திக் (37),  விக் கெட் கீப்பிங் மட்டுமின்றி, சிறப்பாக பேட்டிங் செய்யும் திறமையும் பெற்றவர். கடந்த 2004ல் இந்திய அணியில் இடம் பிடித்தார் தினேஷ் கார்த்திக். இந்திய அணிக்காக 26 டெஸ்ட், 94 ஒருநாள் மற்றும் 65 டி20 போட்டிகளில் விளையாடி உள்ளார்.

ஐபிஎல் போட்டியில் தினேஷ் கார்த்திக் கெட்ட வார்த்தையில் திட்டும் வீடியோ !
2022 ஐபிஎல் தொடரில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிக்காக சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய தினேஷ் கார்த்திக், அதன் காரணமாக இந்திய டி20 அணியில் விளையாடும் வாய்ப்பை பெற்றார். ஆஸ்திரேலியாவில் சமீபத்தில் நடந்த டி20 உலகக் கோப்பையில் விளையாடினார்.  

இந்நிலையில், தினேஷ் கார்த்திக் இன்ஸ்டாகிராமில் நேற்று ஒரு வீடியோ பதிவிட்டுள்ளார். அதில், "இந்தியாவுக்காக டி20 உலகக் கோப்பை தொடரில் விளையாட வேண்டும் என்ற இலக்கை நோக்கி மிகக் கடுமையாக உழைத்தேன். அணியில் இடம் பெற்றது பெருமையான உணர்வை தந்தது. எனது சக வீரர்கள், பயிற்சியாளர்கள், நண்பர்கள் மற்றும் ரசிகர்கள் அளித்த ஆதரவுக்கு நன்றி" என்று கூறியுள்ளார்.

சபரிமலை போறீங்களா?! 60 நாட்களுக்கு உணவு, தங்குமிடம் எல்லாமே இங்கே ஃப்ரீ தான்!!

அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

மப்பேறி தள்ளாடும் நாய்!! மதுவை குடித்ததால் பரிதாபம்!!

From around the web