மாற்றுத்திறனாளி தீக்குளிக்க முயற்சி!! கலெக்டர் அலுவலகத்தில் பரபரப்பு!!

 
திருமால்

ராமநாதபுரம் மாவட்டத்தில்  முதுகுளத்தூர் புளியங்குடியில் வசித்து வருபவர்  திருமால். இவருக்கு மனைவி, ஒரு மகன், ஒரு மகள் உள்ளனர்.இவருக்கு  கடந்த சில ஆண்டுகளுக்கு முன் நடந்த சாலை விபத்தில் இரண்டு கால்களும் பறிபோய்விட்டன. இவர் ராமநாதபுரம் கலெக்டர் அலுவலகத்தில் நடைபெற்ற  மக்கள் குறைதீர் நாள் கூட்டத்தில் மனு அளிக்க வந்திருந்தார்.  

ramanathapuram

திடீரென உடலில் மண்ணெண்ணெயை ஊற்றி தீக்குளிக்க முயன்றார். கலெக்டர் அலுவலகத்தில் பாதுகாப்பு பணியிலிருந்த போலீசார், அவரை தடுத்து  நிறுத்தினர்.  இது குறித்து திருமாலிடம் கேட்ட போது ‘‘விபத்தில் கால்களை இழந்து வேலை ஏதுவும் செய்ய  முடியவில்லை. என்னுடன் சேர்ந்து மனைவி, குழந்தைகளும்  கஷ்டப்படுகின்றனர்.

போலீஸ்

மாற்றுத்திறனாளிகளுக்கு வழங்கப்படும்  இலவச வீடு, மூன்று சக்கர சைக்கிள்  தரக்கோரி மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகம், கலெக்டர் அலுவலகத்தில் விண்ணப்பம் செய்துள்ளேன். இதுவரை நலத்திட்ட உதவிகள் எதுவும் கிடைக்கவில்லை. இதனால் எனக்கு வாழவே பிடிக்கவில்லை.  இதனால் உடலில் தீக்குளித்து தற்கொலை செய்து கொள்ளலாம் என  முடிவெடுத்துள்ளேன். என்னுடைய கோரிக்கையை ஏற்று உதவி செய்ய வேண்டும்.  இல்லையேல் கருணை கொலை செய்து விடுங்கள்  என கண்ணீர் விட்டு அழுதது கேட்டவர்களை கண் கலங்க வைத்தது. 

மார்கழி மாத விரத முறைகள், வழிபாடு, பலன்கள்!

அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

சபரிமலை போறீங்களா?! 60 நாட்களுக்கு உணவு, தங்குமிடம் எல்லாமே இங்கே ஃப்ரீ தான்!!

From around the web