உல்லாசத்துக்கு இடையூறு.. 3 வயது குழந்தை அடித்துக் கொலை!

 
ரஞ்சித்

கொரோனா காலத்துக்கு பின்பான தமிழகத்தில் குற்ற செயல்கள் அதிகரித்துள்ளது. குறிப்பாக பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் அதிகரித்துள்ளன. அனைத்து மாவட்டங்களிலுமே கொலை, கொள்ளை, கற்பழிப்பு என க்ரைம் ரேட் எகிறிக் கொண்டே செல்கிறது. மக்களிடையேயான அதிகரித்துள்ள மன அழுத்தமும் இதற்கு முக்கிய காரணமாக கூறப்படுகிறது. இந்நிலையில், உல்லாசத்துக்கு இடையூறாக இருந்ததால் 3 வயது குழந்தையை  பீர் பாட்டிலால் அடித்துக் கொன்ற கள்ளக் காதலனைப் போலீசார் கைது செய்துள்ளனர்.

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரில் வசித்து வருபவர் நந்தினி (25). இவருக்கு சக்தி என்பவருடன் திருமணமாகி 2 குழந்தைகள் உள்ளனர். கடந்த 7 மாதங்களுக்கு முன்பு நந்தினியின் கணவர் சக்தி உயிரிழந்துள்ளார்.  கணவர் இறந்தாலும் நந்தினியின் காம பசி தீரவில்லை. இந்நிலையில் நந்தினிக்கு அதே பகுதியில் வசித்து வந்த ரஞ்சித் என்பவரோடு பழக்கம் ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து ரஞ்சித்துடன் அலூரில் தனியாக வீடு எடுத்து நந்தினி சேர்ந்து வசித்து வந்துள்ளார். மூத்த மகனை வெளியூரில் உள்ள ஹாஸ்டலில் தங்க வைத்து படிக்க வைத்துள்ளார்.  3 வயதான இளைய மகனை தன்னுடன் வைத்துக் கொண்டுள்ளார்.

இந்நிலையில் கடந்த டிசம்பர் மாதம் ரஞ்சித் - நந்தினி இருவரும் உல்லாசமாக இருந்துள்ளார். அப்போது 3 வயது குழந்தை இவர்களின் உல்லாசத்துக்கு இடையூறாக இருந்தபடியே அழுதுள்ளது. இதனால் ஆத்திரமடைந்த ரஞ்சித் குழந்தை என்று கூட பாராமல் பீர் பாட்டிலால் குழந்தையின் தலையில் அடித்துள்ளார். இதில் படுகாயமடைந்த குழந்தை வலியால் அலறி துடித்துள்ளான். இதனையடுத்து குழந்தையை சிகிச்சைக்காக ஒசூர் அரசு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர்.

Dead

அங்கு முதலுதவி சிகிச்சை அளித்த நிலையில் மேல் சிகிச்சைகாக தருமபுரி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்தனர். குழந்தைக்கு அங்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இதனையடுத்து டிசம்பர் 22ம் தேதி குழந்தையை மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்து வீட்டுக்கு அழைத்து சென்றனர். 25ம் தேதி குழந்தைக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டு வாந்தி எடுத்துள்ளது. சிறிது நேரத்தில் குழந்தையும் இறந்துள்ளது. இதனைத் தொடர்ந்து ரஞ்சித் மற்றும் அவரது உறவினர்கள் குழந்தையின் உடலை ஒசூர் கோகுல் நகர் சுடுகாட்டில் புதைத்துள்ளனர்.

இந்நிலையில் நந்தினியிடம் குழந்தை இல்லாதது குறித்து அவரது தாய் வள்ளி, குழந்தையைப் பற்றி கேட்டுள்ளார். அதற்கு அவர் முன்னுக்கு பின் முரணாக பதிலளித்துள்ளார். இந்த விவரம் ரஞ்சித் காதுகளுக்கு எட்டியுள்ளது. ரஞ்சித் வள்ளியை அழைத்து, குழந்தையைப் பற்றி கேட்டால் கொலை செய்து விடுவதாக மிரட்டியுள்ளார். இதனைக் கேட்டு அதிர்ச்சியடைந்த நந்தினியின் தாய் உடனடியாக குழந்தையின் மரணத்தில் மர்மம் இருப்பதாக ஓசூர் ஹட்கோ காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

Hudco-PS

புகாரின் பேரில் வழக்குப் பதிவு செய்த போலீசார் விசாரணை மேற்கொண்டனர். குழந்தையை பீர் பாட்டிலால் தாக்கி கொலைச் செய்த ரஞ்சித்தை கைது செய்தனர்.  ஹட்கோ போலீசார் ஓசூர் கோகுல் நகர் சுடுகாட்டில் புதைக்கப்பட்ட குழந்தையின் உடலை வட்டாட்சியர் முன்னிலையில் தோண்டி எடுத்து மருத்துவர்கள் மூலம் பிரேத பரிசோதனை மேற்கொண்டனர். தொடர்ந்து இந்த கொலைச் சம்பவம் குறித்து போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

2023 இந்த 6 ராசிகளுக்கு அதிர்ஷ்டம் அலைமோதும்! பயன்படுத்திக்கோங்க

From around the web