போராட்டத்தில் மயக்கம்! முதல்வரின் சகோதரி மருத்துவமனையில் அனுமதி! பெரும் பரபரப்பு!

 
ஷர்மிளா ஜெகன்மோகன் தங்கை

தெலுங்கானாவில் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்ட ஆந்திர முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டியின் சகோதரி சர்மிளா திடீரென மயக்கமடைந்த நிலையில், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

தெலுங்கானாவில் சந்திரசேகர் ராவ் தலைமையிலான  தெலுங்கானா ராஷ்டிரிய சமிதி கட்சி ஆட்சி நடக்கிறது. இந்நிலையில், ஆந்திர முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டியின் சகோதரி சர்மிளா ரெட்டி, ஒய்.எஸ்.ஆர். தெலுங்கானா என்ற பெயரில் தனியாக கட்சி நடத்தி வருகிறார். 

ஷர்மிளா ஜெகன்மோகன் ரெட்டி

இந்நிலையில், தெலுங்கானா முதல்வர் சந்திரசேகர் ராவுக்கு எதிராக அவரது இல்லத்திற்கு முன் போராட்டம் நடத்துவதற்காக சர்மிளா ரெட்டி கடந்த மாதம் இறுதியில், காரில் புறப்பட்டு சென்றார். சர்மிளா காரில் அமர்ந்திருந்த போதே அவரை வழிமறித்து போலீசார் காரை தூக்கிச் சென்றனர். கடந்த இரு தினங்களுக்கு முன்பாக தனது பாத யாத்திரைக்கு அனுமதி அளிக்க வேண்டும் என கோரி சர்மிளா உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டார். 

ஷர்மிளா ஜெகன்மோகன் ரெட்டி

நீதிமன்றம் அனுமதி உள்ள போதும், போலீசாரின் அனுமதி பெறாத சூழலில், அம்பேத்கர் சிலை அருகே அவரை கட்டாயப்படுத்தி வீட்டுக்குள் போலீசார் அனுப்பி வைத்தனர். தொடர்ந்து, நேற்று 2வது நாளாக வீட்டில் இருந்த படியே உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டார். இந்நிலையில், 3வது நாளாக இன்று காலை காலவரையற்ற உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டார். எனினும், திடீரென மயக்கமடைந்த நிலையில், ஜெகன் மோகன் ரெட்டியின் சகோதரி சர்மிளாவை உடனடியாக ஐதராபாத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. முதல்வரின் சகோதரி திடீரென மயக்கமடைந்த நிலையில், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சபரிமலை போறீங்களா?! 60 நாட்களுக்கு உணவு, தங்குமிடம் எல்லாமே இங்கே ஃப்ரீ தான்!!

அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

மப்பேறி தள்ளாடும் நாய்!! மதுவை குடித்ததால் பரிதாபம்!!

From around the web