கார்டு பால் வாங்கறீங்களா?! ஆவின் அட்டையை ரேஷன் கார்டுடன் இணைக்க உத்தரவு!!

 
ஆவின் பால்

தமிழக அரசு சார்பில் பால் கொள்முதல் செய்து விநியோகம் செய்யும் ஆவின் நிறுவனம் நிறுவனம் நடத்தப்பட்டு வருகிறது. இந்நிறுவனம் தினமும் 40 லட்சம் லிட்டருக்கு மேல் பால் கொள்முதல் செய்து அவை  கொழுப்பு சத்து அடிப்படையில் பிரிக்கப்படுகின்றன. அதன்பிறகு பாலின் கொழுப்பு அளவின் அடி  சிவப்பு, ஆரஞ்சு, பச்சை மற்றும் நீலநிற பாக்கெட்டுகளில் அடைக்கப்பட்டு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. 

ஆவின்
அதன்படி ஆவின் ஆரஞ்சு பாக்கெட் பால், சில்லறை விலையில் 60 ரூபாய்க்கும், சிவப்பு பாக்கெட் பால்  சில்லறை விலையில் ரூ76க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. அதேநேரத்தில், கார்டு மூலம் பால் பெறும் மாதாந்திர அட்டைதாரர்களுக்கு 46 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. இந்நிலையில், ஆரஞ்சு நிற பாக்கெட் பாலை சிலர் மாதாந்திர அட்டையில் வாங்கி வணிக ரீதியாக விற்பனை செய்து வருவதாக தொடர் புகார்கள் எழுந்து வருகின்றன.

ஆவின் பால் லாரி

இதனை களையும் வகையில்  ஆவின் மாதாந்திர அட்டையுடன் ரேஷன் அட்டையை இணைக்கும் பணியை ஆவின் நிர்வாகம் தீவிரப்படுத்தி வருகிறது. ஆவினின்  27 மண்டலங்களில் இணையதளம் மூலமாக இந்த பணிகள் தொடர்ந்து  நடைபெற்று வருகின்றன. இதற்கு பொதுமக்கள் முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் எனவும் அப்போது தான் முறைகேடுகளை தவிர்க்க முடியும் எனவும் ஆவின் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

சபரிமலை போறீங்களா?! 60 நாட்களுக்கு உணவு, தங்குமிடம் எல்லாமே இங்கே ஃப்ரீ தான்!!

அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

மப்பேறி தள்ளாடும் நாய்!! மதுவை குடித்ததால் பரிதாபம்!!

From around the web