வீட்டை விட்டு வெளியே வராதீங்க!! நாளை முதல் 3 நாட்களுக்கு உறைபனி மஞ்சள் அலர்ட்!!

 
மஞ்சள் அலர்ட்

இந்தியாவின் வட மாநிலங்களில் சாதாரணமாகவே நவம்பர் முதல் ஜனவரி வரை  கடுமையான குளிர் காலம். அத்துடன் மூடுபனியும், பனிப்பொழிவும் சர்வசாதாரணம். ஆனால் நடப்பாண்டை பொறுத்தவரை வழக்கத்தை விட மிக மோசமான காலநிலை வடமாநிலங்களில் நிலவி வருகிறது.  அதிலும் நாளை முதல் அதாவது ஜனவரி 17 முதல் 19 வரை தொடர்ந்து 3 நாட்களுக்கு  உறைபனி அலை தாக்கம் ஏற்படும் என இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

டெல்லி மாசு காற்று வாகனம் பனி

வடமாநிலங்களுக்கு உறைபனி மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. பொதுமக்கள் வீட்டை விட்டு வெளியில் வராமல் பாதுகாப்பாக இருக்கும்படி அறிவிக்கப்பட்டுள்ளது. 
ஜனவரி முதல் தேதியில் இருந்தே பஞ்சாப், ஹரியானா, ராஜஸ்தான்,  சண்டிகர், டெல்லி, உத்திரபிரதேசம், ஜார்க்கண்ட், பீகார் மாநிலங்களில் கடும் குளிரால் பொதுமக்கள் அவதிப்பட்டு வருகின்றனர்.  குளிரின் தாக்கத்தால் உயிரிழப்பு அதிகரித்து வருகிறது. இதனால் பள்ளிகளுக்கு குளிர்கால விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

பனிமூட்டம்
2023ல் ஜனவரி  21ம் நூற்றாண்டிலேயே மிகவும் குளிரான மாதமாகவும் அமையலாம் என லைவ் வெதர் ஆஃப் இந்தியா  தெரிவித்துள்ளது.  மேலும்  "நாடு மற்றொரு தீவிர குளிர் அலையை எதிர்கொள்ள வேண்டி இருக்கிறது.  ஜனவரி 17, 18,19 தேதிகளில் குளிர் அலை உச்சமாக இருக்கும்.  இந்த குளிர்கால வெப்பநிலை 4 டிகிரி வரை குறையக்கூடும் எனவும், பல இடங்களில் அடர்ந்த மூடுபனி நிலவக்கூடும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது. இதனால்  பொதுமக்கள் அனைவரும் வெதுவெதுப்பான  இடங்களில் பாதுகாப்புடன் இருக்கும்படி அறிவுறுத்தப்பட்டுள்ளது. 

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

சபரிமலை போறீங்களா?! 60 நாட்களுக்கு உணவு, தங்குமிடம் எல்லாமே இங்கே ஃப்ரீ தான்!

From around the web