அமாவாசை திதி கொடுத்ததும் இதை மறக்காம செய்துடுங்க!
பலரும், ஏன் அமாவாசையன்று தர்ப்பணம் தருகிறோம் என்று தெரியாமலேயே தருகிறார்கள். சாஸ்திரங்களையும், சம்பிரதாயங்களையும் புரிந்து கொள்ளுங்கள். எல்லோரும் செய்கிறார்களே என்று உங்கள் மூதாதையரிடம் மனம் விட்டு பிரார்த்தனை செய்யாமல் அமாவாசையன்று தர்ப்பணம் தருவதினால் ஒரு பலனும் கிடைக்காது.
வருடத்தில் அனைத்து மாதங்களிலுமே அமாவாசை வருகிறது. அனைத்து அமாவாசை தினத்திலும் தர்ப்பணம் தர முடியாவிட்டாலும் மூன்று அமாவாசை திதிகளிலாவது தர்ப்பணம் தாருங்கள் என்கிறார்கள். ஆடி அமாவாசை, புரட்டாசி அமாவாசை, தை அமாவாசை தினங்கள் சிறப்பு வாய்ந்தவை என்கிறார்கள்.
பொதுவாக அமாவாசை திதியில், முன்னோரை வழிபட்டு, தர்ப்பணம் கொடுத்த பின்பு அவசியம் செய்ய வேண்டிய வழிபாடு அம்பிகை வழிபாடு. அமாவாசை தர்ப்பணம் கொடுத்த பின்னர், அருகில் உள்ள சிவாலயத்திற்கு செல்லுங்கள். சிவனை தரிசித்த பிறகு, உங்கள் மூதாதையர், முன்னோர்களிடம் தர்ப்பணம் தரும் போது என்ன வேண்டிக் கொண்டீர்களோ அதையே அம்மாள் முன், தாய் முன்பாக பிள்ளை வரம் கேட்பதைப் போல, உங்கள் வாழ்வு உயர கைக்கூப்பி அவள் பாதம் நோக்கி வணங்குங்கள். அடுத்த அமாவாசை திதிக்குள் உங்கள் பிரச்சனைகள் குறைய துவங்கும்.

அமாவாசை நாட்களில் சந்திரனின் ஒளி பூமியில் படுவதில்லை. இந்த நாளில் மனம் அலைபாய்வதாக ஜோதிட நிபுணர்கள் தெரிவிக்கின்றனர். மனம் அமைதியாக இருந்தால் மட்டுமே வாழ்க்கை குறித்த புரிதல் இருக்கும்.
அதே போல் அமாவாசை தினத்தில் தான் அபிராமி பட்டருக்கு அம்பிகை பௌர்ணமியாக காட்சி கொடுத்தாள். திருக்கடையூரில் 300 ஆண்டுகளுக்கு முன்னர் வாழ்ந்தவர் அபிராமி பட்டர் . அபிராமி பட்டரின் இயற்பெயர் சுப்பிரமணியன். இவர் அமாவாசை நாளில் அம்பிகையைத் துதித்து அந்தாதி பாடினார். அந்தப் பாடல்களில் மகிழ்ந்த அம்பிகை தன் காதோலையை கழற்றி வானில் வீச அது பௌர்ணமியாகச் சுடர் விடச் செய்தாள். பக்தனுக்காக இயற்கையை மாற்றினாள் அம்பிகை. இன்றளவும் திருக்கடையூரில் அந்த விழா கொண்டாடப்படுகிறது.

அதனால், அமாவாசை தினத்தன்று அந்த அபிராமி அந்தாதியைப் பாடுவது மிகவும் சிறப்பு. வீட்டில் விளக்கேற்றி அம்பிகையை மனமுருக பிரார்த்தனை செய்து அந்தாதி பாடினால் வாழ்வில் உள்ள துன்பங்கள் எல்லாம் பறந்தோடும்.
எனவே இன்று மாலை வீடுகளில் அம்பிகையின் படத்திற்கு விளக்கேற்றி வழிபாடு செய்வதும் ஆலயங்களில் அம்பிகை தரிசனம் செய்திட வாழ்வின் இன்னல்கள் தீர்ந்து வளம் கொழிக்கும் என்பது நம்பிக்கை. அதனால் மறக்காமல் இன்று மாலை உங்கள் இல்லத்தில் அபிராம் அந்தாதியைப் பாடுங்க. அம்பிகையை போற்றுவோம். அவள் அருள் பெறுவோம். வாழ்வில் வளம் சேர்ப்போம்.
மார்கழி மாத விரத முறைகள், வழிபாடு, பலன்கள்!
அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!
சபரிமலை போறீங்களா?! 60 நாட்களுக்கு உணவு, தங்குமிடம் எல்லாமே இங்கே ஃப்ரீ தான்!!
