சேவல்களுக்கு மது கொடுக்க கூடாது, கால்களில் கத்தி கட்டக் கூடாது!! உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு!!

 
சேவல்

நாளை தமிழகம் முழுவதும் பொங்கல் பண்டிகை கோலாகலமாக கொண்டாடப்பட உள்ளது. இதனை முன்னிட்டு தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும்  ஜல்லிக்கட்டு போட்டிகள்  நடத்தப்படுவது வழக்கமாக இருந்து வருகிறது. சில இடங்களில் சேவல் சண்டைகளும் நடத்தப்பட்டு வந்தன. ஆனால் பல்வேறு விதிமீறல்கள் காரணமாக தமிழ்நாட்டில் சேவல் சண்டைக்கு தடை விதிக்கப்பட்டது.

சேவல்

இதையடுத்து, ஈரோடு மாவட்டம் மற்றும் திருவள்ளூர் மாவட்டத்தில் சேவல் சண்டை நடத்துவதற்கு அனுமதி கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டன. இந்த வழக்குகள்  இன்று விசாரணைக்கு வந்த நிலையில் சேவல் சண்டைகள் நடத்த  வழிகாட்டு நெறிமுறைகள் வெளியிடப்பட்டுள்ளன. 

அதன்படி 
சேவல் சண்டையின் போது சூதாட்டம் நடத்த மாட்டோம். சண்டையில் கலந்து கொள்ளும் சேவல்கள் துன்புறுத்தக்கூடாது. 
போட்டி நடைபெறக்கூடிய இடத்தில் ஒரு கால்நடை மருத்துவர் இருக்க வேண்டும்.
சேவல்களுக்கு மது கொடுக்கக் கூடாது.

சேவல்
அவற்றின் கால்களில் கத்தி கட்டக்கூடாது .
மேலும் இந்த சேவல் சண்டை போட்டியின் போது குறிப்பிட்ட சமுதாயத்தை சேர்ந்தவர்களை பெருமைப்படுத்தும் வகையில் எந்த ஒரு நடவடிக்கைகளிலும் ஈடுபடக்கூடாது 
நிபந்தனைகளை மீறுபவர்கள் மீது கடும்  நடவடிக்கை எடுக்கப்படும் என உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது. 

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

சபரிமலை போறீங்களா?! 60 நாட்களுக்கு உணவு, தங்குமிடம் எல்லாமே இங்கே ஃப்ரீ தான்!

From around the web