குளிர்காலத்தில் வாக்கிங் போகாதீங்க!! 5 நாட்களில் 98 பேர் மரணம்!! அதிர்ச்சி தரும் ஆய்வறிக்கை!!

 
வாக்கிங்

இந்தியாவில் வடமாநிலங்களில் கடும்குளிரால் பள்ளிகளுக்கு ஜனவரி 15ம் தேதி வரை விடுமுறை விடப்பட்டுள்ளது.  குறிப்பாக, டெல்லி, அரியானா, உத்தரப்பிரதேசம் மாநிலங்களில்  உறைய வைக்கும் குளிர் வாட்டி வதைக்கிறது. இதனால் இந்த மாநிலங்களுக்கு ரெட் அலெர்ட் எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், எல்.பி.எஸ் இன்ஸ்டிடியூட் ஆப் கார்டியாலஜி  எச்சரிக்கை பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளது.

வாக்கிங்

அதன்படி உத்தரபிரதேசத்தில் கடந்த 5 நாட்களில்  மட்டும் மாரடைப்பு மற்றும் மூளைச்சாவு காரணமாக 98 பேர் உயிரிழந்துள்ளதாக அதிர்ச்சி தரும் தகவலை வெளியிட்டுள்ளது.  உயிரிழந்த 98பேரில், 44 பேருக்கு தீவிர சிகிச்சைக்கு பின்னும் மருத்துவமனைகளில் உயிரிழந்துள்ளனர், 54 பேர்  மருத்துவமனைக்கு வருவதற்கு முன்பே உயிரிழந்துள்ளதாக தெரிவித்துள்ளது.கான்பூரில் உள்ள லக்ஷ்மிபத் சிங்கானியா இன்ஸ்டிடியூட் ஆப் கார்டியாலஜி மற்றும் கார்டியாக் சர்ஜரி இது குறித்து புள்ளிவிபர தரவுகளை வெளியிட்டுள்ளது. அதில்  ஒரே வாரத்தில் 723 இதய நோயாளிகள் மருத்துவமனையின் அவசர மற்றும் வெளிநோயாளர் பிரிவுக்கு வந்துள்ளனர். கடுமையான குளிரால் பாதிக்கப்பட்ட 14 பேருக்கு மாரடைப்பு, 6 பேருக்கு இதய நோய், வேலை செய்யும் நிறுவனத்திலேயே 8பேர் என விளக்கம் அளித்துள்ளது. 

வாக்கிங்
கொரோனா காலகட்டத்திற்கு  பிறகு இந்தியாவில் இளம் வயதினரிடையே மாரடைப்புக்கள் அதிகரித்து வருகின்றன.  கிங் ஜார்ஜ் மருத்துவ பல்கலைக்கழகத்தின் பேராசியர் “இந்த குளிர் காலத்தில் மாரடைப்பு  வயதானவர்களுக்கு மட்டும் வராது. டீன் ஏஜ் வயதினருக்கு கூட மாரடைப்பு வரலாம் என அதிர்ச்சி தகவலை தெரிவித்தார்.சூரிய உதயத்திற்கு முன் குளிர்காலத்தில் வெளிப்புற காலை நடைப்பயிற்சியைத் தவிர்ப்பது நல்லது என இதயநோய் நிபுணர்கள் பரிந்துரை செய்கின்றனர்.  இந்த காலநிலையில் குளிரில் இருந்து நோயாளிகளை பாதுகாக்க வேண்டியதும் அவசியமான ஒன்று தான் என தெரிவித்துள்ளார். 

மார்கழி மாத விரத முறைகள், வழிபாடு, பலன்கள்!

அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

சபரிமலை போறீங்களா?! 60 நாட்களுக்கு உணவு, தங்குமிடம் எல்லாமே இங்கே ஃப்ரீ தான்!!

From around the web