கோவில் நிர்வாகங்களில் தலையிடக்கூடாது!! ஸ்டாலினுக்கு சுப்பிரமணியசாமி எச்சரிக்கை!!

 
சுப்பிரமணிய சாமி

தமிழகத்தில் இந்து அறநிலையத்துறையின் கீழ் செயல்பட்டு வரும் கோவில்களில் பல நிர்வாக மாற்றங்களை தமிழக அரசு அதிரடியாக செய்து வருகிறது.  கோவில்கள் சார்பில் கல்லூரிகள், தங்கநகைகளை உருக்கி நாணயங்களாக்குதல், கோவில் நிலங்களை கையகப்படுத்துதல் என தொடர்ந்து பல்வேறு குற்றச்சாட்டுக்கள் எழுந்து வருகின்றன. இது குறித்து மூத்த அரசியல்வாதி சுப்பிரமணியன் முதல்வர் ஸ்டாலினுக்கு எச்சரிக்கை கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். உடனடியாக இது குறித்து நடவடிக்கை எடுக்க தவறும் பட்சத்தில் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்படும் எனவும் எச்சரிக்கை விடுத்துள்ளார். 

 அதன்படி அரசின் கட்டுப்பாட்டில் உள்ள இந்து ஆலயங்களை விடுவிக்க வேண்டுமென முதலமைச்சருக்கு பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணியன் சுவாமி  கடிதம் எழுதியுள்ளார்.  உச்சநீதிமன்றத்தில் வழங்கப்பட்டுள்ள தீா்ப்புகளை மேற்கோள் காட்டி அவர் எழுதியுள்ள  கடிதத்தில், தமிழக அரசின் கட்டுப்பாட்டில்  உள்ள இந்து  ஆலயங்களை விடுவிக்க வேண்டும், இது தொடா்பாக தமிழக அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க தவறினால் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடரப்படும் என்று குறிப்பிட்டுள்ளார்.  

சுப்பிரமணியன் சுவாமி

 தமிழகத்தில் உள்ள இந்து கோயில்களும், மதம் தொடா்பான நிறுவனங்களும், தமிழக அரசின் இந்து சமய மற்றும் அறநிலையத் துறையின் நீண்டகால கட்டுப்பாட்டில் இருப்பதால் பல்வேறு அவல நிலைக்கு உள்ளாகியுள்ளன. இது குறித்து தங்கள் கவனத்திற்கு கொண்டு வரவே இந்தக் கடிதத்தை எழுதுகின்றேன். மேலும், அரசே இந்து சமயங்கள் தொடா்பான கோயில்களை நிர்வகிப்பது, இந்திய அரசியலமைப்பு பிரிவு 25 மற்றும் பிரிவு 26 ஆகியவற்றில் சொல்லப்பட்டவற்றுக்கு எதிரானவையாகும். 2014-இல் உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசுக்கு எதிராக நான்   தொடா்ந்த வழக்கில்   வாதிட்டு வெற்றிபெற்றேன். அந்த தீா்ப்பில் முக்கியமாக, கோயில்களின் எந்த மதப் பணிகளையும் எந்த அரசும் கையகப்படுத்த முடியாது என்று உச்சநீதிமன்றம் குறிப்பிட்டுள்ளது.

சுப்பிரமணியன் சுவாமி

உச்சநீதிமன்றத் தீா்ப்பில் உள்ள 64, 65, 66 67 மற்றும் 68 ஆகிய பத்திகளையும் நான்  உங்கள் கவனத்திற்கு கொண்டு வருகின்றேன்.  இவை போதுமான தெளிவுடன்  சிக்கலைத்  தீா்க்கின்றன. மேலும், ஒரு கோயிலில் நிதி முறைகேடு இருந்தால், அந்தக் கோயிலின் நிதியுடன் இணைக்கப்பட்ட மதசார்பற்ற செயல்பாடுகளின் நிதி முறைகேட்டை  நிவர்த்தி செய்ய கோயில்களை அரசு  எடுத்துக் கொள்ளலாம். 

ஆனால், அதுவும் ஒரு குறிப்பிட்ட காலத்திற்கு எடுத்துக் கொண்டு நிர்வாக  சீா்கெடு சரி செய்யப்பட்ட  பின்னர்  கோயிலை சம்பந்தப்பட்டவா்களிடம்  அரசு ஒப்படைக்கவேண்டும். எனவே, தமிழக அரசு உச்சநீதிமன்றத் தீர்ப்பிற்கு இணங்க வேண்டும் என்பதையும்,  இந்து கோயில்கள் மற்றும் மத நிறுவனங்களை  மாநில அரசின் கட்டுப்பாட்டில் இருந்து விடுவிக்க வேண்டும் என்பதையும் உங்கள் கவனத்திற்கு கொண்டு வருகிறேன் என்று பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணியன் சுவாமி  தனது கடிதத்தில்  குறிப்பிட்டுள்ளார்.

சபரிமலை போறீங்களா?! 60 நாட்களுக்கு உணவு, தங்குமிடம் எல்லாமே இங்கே ஃப்ரீ தான்!!

அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

மப்பேறி தள்ளாடும் நாய்!! மதுவை குடித்ததால் பரிதாபம்!!