பஞ்சு மெத்தை, கார், பங்களா எதுவுமே வேண்டாம்!! துறவறம் போன 9 வயசு கோடீஸ்வர சிறுமி!!

 
தேவன்ஷி

இன்று நாம் அனைவருமே மிக மிக சொகுசாக வாழ்வதற்கும், ஆடம்பரத்தில் திளைப்பதற்கும் தான் ஓடிஓடி பணம் சம்பாதிக்க தொடங்குகிறோம். அதற்கு ஒரு முடிவே இல்லாமல் தினசரி ஓட்டத்தில் நம் வாழ்க்கையையும் தொலைத்து விடுகிறோம். கோடிகளில் திளைத்து ஆடம்பர, சொகுசு வாழ்க்கை வாழ வேண்டும் என்பதே பலரின் கனவு , லட்சியமாக இருந்து வருகிறது. 
ஆனால் பிறந்தது முதலே  'BORN WITH DIAMOND SPOON'  வாழ்க்கை வாழ்ந்த ஒரு சின்னஞ்சிறு சிறுமி இந்த ஆடம்பர வாழ்வு தமக்கு வேண்டாம் என முடிவெடுத்து துறவறம் பூண்டுள்ளார்.

தேவன்ஷி

தானேஷின் குடும்பம்  கடந்த 30 ஆண்டுகளுக்கு மேலாக வைர வியாபாரம் செய்து வருகின்றது. இவரது சங்வி& சன்ஸ் நிறுவனம் வைரத்தை பட்டை தீட்டி வெளிநாடுகளுக்கும் ஏற்றுமதி செய்து வருகிறது. ஆண்டுக்கு ரூ.100 கோடி மதிப்பில் வர்த்தம் செய்து வருகிறது. மூத்த மகள் தேவான்ஷிக்கு பணம் சொத்து ஆகியவற்றில் ஆரம்பம் முதலே நாட்டம் ஏதும் இல்லை என பெற்றோர் தெரிவிக்கின்றனர். 


சிறுவயது முதலே 3 வேளைகள் பிரார்த்தனை, தியானம், பக்தி என இருந்துள்ளார். அதே போல்  டிவி, சினிமா கூட பார்ப்பதில்லை என்கின்றனர். ஆசையாக ஹோட்டல்களுக்கு சென்றும் சாப்பிட்டதில்லை எனவும் கூறப்படுகிறது.தொடர்ந்து 367 முறை துறவறம் பூணும் நிகழ்ச்சியை பார்த்துள்ள தேவான்ஷிக்கு தானும் துறவியாகவே விருப்பம். உடனே  ஜைன மதத் துறவியிடம் சென்று தனது விருப்பத்தை கூறினார். ஆனால் அவர் துறவற வாழ்வு மிக கடினம். ஒரே இடத்தில் தங்கி விடக்கூடாது. நடைப்பயணம் செய்ய வேண்டும் எனக் கூறினார். உடனே சிறுமியும் துறவிகளுடம் 600 கிமீ நடைப்பயணம் மேற்கொண்டு எளிமையான வாழ்க்கையை வாழ்ந்து காட்டினார். இதன் பிறகு துறவியும் இவருக்கு தீட்சை தர ஒப்புக் கொண்டதாக கூறப்படுகிறது.  பெற்றோரின் சம்மதத்துடன், நேற்று துறவுக்கான தீட்சையை பெற்றுள்ளார். 

குஜராத் மாநிலத்தில் முண்ணனி தொழிலதிபர்கள் தானேஷ், அமி சங்வி தம்பதியினர். வைர வியாபாரத்தில்  கோடிகளில் வர்த்தகம் புரியும் இவர்களின்  சங்வி அண்ட் சன்ஸ் நிறுவனம் மிகவும் பிரபலமானது. இவர்களுக்கு  2 மகள்கள். மூத்தவள் 9 வயது தேவன்ஷி இளையவள் , இளையவளுக்கு 4 வயது. இதில், மூத்தவளான  தேவன்ஷி  துறவறம் பேண தீட்சை பெற்றுள்ளார்

தேவன்ஷி

 இவர்  கோடிகளை துறந்து தான் விரும்பிய எளிய துறவற வாழ்க்கைக்கு மாறியுள்ளதாக தெரிவித்துள்ளார்.  சின்னஞ்சிறு வயதில் ஆசா பாசங்களை துறந்து  துறவறத்தை மேற்கொண்டது அப்பகுதி மக்களிடையே பெரும் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.இதற்கான விழாவில் கலந்து கொண்ட  ஜெயின் துறவி ஆச்சார்யா விஜய் கீர்த்தியாசூரி தேவன்ஷிக்கு  துறவறம் பூணுவதற்கான தீட்சை வழங்கினார்.இதுகுறித்து அவர்களின் குடும்ப நண்பர் நிரவ் ஷா கூறுகையில்  ''தேவன்ஷி சிறுவயதிலேயே துறவிகளுடன் 700 கி.மீ. தூரம் நடைபயணம் மேற்கொண்டவர். அவருக்கு அந்த வாழ்க்கை பிடித்து போனதால் துறவறம் பூணுகிறார் ”எனத்  தெரிவித்துள்ளார். 

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

அசத்தல்.. மருமகனுக்கு 379 வகையான உணவுகளை சமைத்து, பரிமாறி திக்குமுக்காட செய்த மாமியார்!

From around the web