அவசரபடாதீங்க.. தங்கம் விலை சவரனுக்கு ரூ.96 குறைவு! மேலும் குறைய வாய்ப்பு!

 
தங்கம்

நேற்றைய தங்கம் விலை நிலவரப்படி சவரனுக்கு ஆபரண தங்கம் ரூ.96 குறைந்துள்ளது. ஒரு கிராம் ஆபரண தங்கத்தின் முந்தைய விலையில் இருந்து ரூ.12 குறைந்து விற்பனை செய்யப்பட்டது. பொதுவாகவே தை மாசம் பொறந்தாச்சுன்னா வீட்டில கல்யாணம், சுபகாரியம் எல்லாம் நாள் குறிச்சு ரெடியா இருப்பாங்க. விசேஷத்துக்கு தேவையான தங்க நகைய மட்டும் வாங்கிட்டா சூப்பரா விசேஷத்த கொண்டாடி முடிச்சிடலாம் என்பது தான் பலரோட எதிர்பார்ப்பும், ஆசையுமாக இருக்கும். ஆனால் தங்கத்தோட விலைய நினைச்சா கடை பக்கமே போக முடியாத சூழ்நிலை. கிராம் ரூ5000க்கும் அதிகமாகி நடுத்தர மக்கள் வாங்கவே முடியாதோ நிலைமைக்கு வந்திடுச்சி.

தினம் தினம் ஏறிக்கிட்டே இருந்த தங்கம் இன்னைக்கு கொஞ்சம் குறைஞ்சிருக்கு. இதனால் இல்லத்தரசிகளுக்கு ஒரு ஆறுதல் தான்.  நகை வாங்கணும்னு நினைக்கிறவங்க இன்னைக்கு கொஞ்சம் கூட  வாங்கிடலாம்னு நினைக்கிற அளவுக்கு குறைஞ்சிருக்கு. இன்றைய நிலவரப்படி சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.12 குறைந்துள்ளது.  ஒரு கிராம் ஆபரணத் தங்கத்தின் விலை ரூ.5,305க்கும், சவரனுக்கு ரூ.96 குறைந்து ஒரு சவரன் ரூ.42,440க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

தங்கத்தின் விலை குறைந்த அதே நேரத்தில் வெள்ளியின் விலையும் கிராமுக்கு 50 காசுகள் குறைந்துள்ளது. அதன்படி  ஒரு கிராம் வெள்ளியின் விலை ரூ75.30க்கும்,  ஒரு கிலோ வெள்ளியின் விலை ரூ.500 குறைந்து ரூ.75,300க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

கடந்த சில நாட்களாகவே உயர்ந்து வந்த நிலையில்,  கடந்த சில நாட்களுக்கு முன்  ஒரு கிராம் ஆபரண தங்கத்தின் விலை ரூ.5200யைத் தாண்டியது.   தமிழகத்தை பொறுத்தவரை நடுத்தர மக்களின் மிகப்பெரிய சேமிப்பாகவும், முதலீடாகவும் இருந்து வருவது தங்கம் தான். இல்லத்தரசிகள் தொடங்கி முதலீட்டாளர்கள் வரை தங்கத்தில் அதிக முதலீடு செய்துவருவதாக பொருளாதார வல்லுனர்கள் தெரிவித்துள்ளனர். எங்கெங்கோ வீடு, மனை, சென்னைக்கு மிக அருகில் என திருச்சி வரை ரியல் எஸ்டேட்டில் முதலீடு செய்பவர்களும் தங்கத்தில் ஒரு பகுதியை முதலீடு செய்துள்ளனர். தங்கத்தை பொறுத்தவரை விலை ஏறினாலும், இறங்கினாலும் அதற்கான மவுசே தனிதான்.

தங்கம்

 நடுத்தர மக்கள் இனி நம்மால் தங்கத்த வாங்கவே முடியாதோ, கண்ணால தான் பார்க்கணும் என புலம்புவதை கேட்க முடிகிறது. சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சர்வதேச சந்தையில் தங்கத்தின் விலை நிலவரத்தை பொறுத்து நிர்ணயிக்கப்பட்டு வருகிறது. இந்தியாவை பொறுத்தவரை கொரோனா ஊரடங்கிற்கு பிறகு தங்கத்தின் மீதான முதலீடு அதிகரித்து இருப்பதாக பொருளாதார நிபுணர்கள் தெரிவித்துள்ளனர். மார்ச் மாதம் தங்கத்தின் மீது இறக்குமதி வரி விதிக்கப்பட்டது முதலே தங்கத்தின் விலை ஏற்ற இறக்கமாக இருந்து வருகிறது.

அதிரடியாக உயர்ந்த தங்கம்!! சவரனுக்கு ரூ240 அதிகரிப்பு!!
அதிலும் டிசம்பர் மாத தொடக்கம் முதலே தங்கத்தின் விலை வரலாறு காணாத அளவு உயர்ந்து வருகிறது. இந்த உயர்வு நடுத்தர வர்க்கத்தினர், முதலீட்டாளர்கள், நகைப்பிரியர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியையும், கலக்கத்தையும் ஏற்படுத்தியுள்ளது.நடுத்தர வர்க்கத்தினர் மத்தியில் இனி தங்கம் வாங்கவே முடியாதோ என்ற அச்சத்தை உருவாக்கியுள்ளது. இந்தியாவை பொறுத்தவரை தங்கத்தின் விலை ஏறினாலும் இறங்கினாலும் அதற்கான மவுசே தனிதான். இதனை ஒரு பெரும் சேமிப்பாக நடுத்தர வர்க்கத்தினர், இல்லத்தரசிகள், முதலீட்டாளர்கள் கருதுகின்றனர்.

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? எந்த வியாபாரம் உங்களுக்கு லாபம் தரும்!?

அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம

From around the web