வதந்திகளை பரப்பாதீங்க... உயிரோட தான் இருக்காரு! பிரபல நடிகையின் மனைவி உருக்கமான வேண்டுகோள்!

 
கோகலே

என்னுடைய கணவர் இறக்கவில்லை. தயவு செய்து வதந்திகளைப் பரப்பாதீங்க.. வெண்டிலேட்டர் உதவியுடன் திவீர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சைப் பெற்று வருகிறார். அவர் நலம் பெற்று வீடு திரும்ப ரசிகர்கள் பிரார்த்தனை செய்யுங்கள் என்று பிரபல இந்தி திரைப்பட நடிகர் விக்ரம் கோகலேவின் மனைவி விருஷாலி உருக்கமாக வேண்டுகோள் வைத்துள்ளார்.

முன்னதாக, தமிழ் இணையதளங்கள் நடிகர் விக்ரம் கோகலே காலமானதாக செய்தி வெளியிட்டிருந்த நிலையில், அவர் உயிருடன் இருப்பதாகவும், சிகிச்சைத் தொடர்ந்து வருவதாகவும் நடிகர் விக்ரம் கோகலே மகள் தெரிவித்தார். 


நடிகர் கமல்ஹாசனின் ஹே ராம் படத்தில் விக்ரம் கோகலே நடித்துள்ளதன் மூலமாக தமிழ் திரைப்பட ரசிகர்களுக்கு நன்கு அறிமுகமானவர். 77 வயதான விக்ரம் கோகலே கடந்த நவம்பர் 5 தேதி புனேவில் தனியார் மருத்துவமனை ஒன்றில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். 

மருத்துவ சிகிச்சையில் இருந்த போதிலும் விக்ரமின் இருதயம், சிறுநீரகம் போன்ற உறுப்புகளின் செயல்பாடுகள் பாதிக்கப்பட்டுள்ளன. இந்நிலையில், நேற்று மாலை திடீரென கோமா நிலைக்கு சென்ற விக்ரம் கோகலே, வென்டிலேட்டர் சிகிச்சையில் கண்காணிக்கப்பட்டு வருகிறார். 

கோகலே

நடிகர் விக்ரம் கோகலேவின் மனைவி விருஷாலி, அவர் நலமுடன் வீடு திரும்ப பிரார்த்தனைச் செய்யுமாறு ரசிகர்களிடம் வேண்டுகோள் விடுத்துள்ளார். இந்தியாவின் முதல் பெண் சினிமா நடிகையான துர்காபாய் காமத்தின் கொள்ளுப்பேரன் நடிகர் விக்ரம் கோகலே என்பது குறிப்பிடத்தக்கது. இவரது பாட்டி கமலாபாய் கோகலே இந்தியாவின் முதல் பெண் குழந்தை நட்சத்திரமாவார். மராத்தி, இந்தி,தெலுங்கு, தமிழ் ஆகிய மொழி திரைப்படங்களில் விக்ரம் கோகலே நடித்துள்ளார். 2013ம் ஆண்டின் சிறந்த நடிகருக்கான தேசிய விருதையும்  வென்றுள்ளார். 

சபரிமலை போறீங்களா?! 60 நாட்களுக்கு உணவு, தங்குமிடம் எல்லாமே இங்கே ஃப்ரீ தான்!!

அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

மப்பேறி தள்ளாடும் நாய்!! மதுவை குடித்ததால் பரிதாபம்!!

From around the web