கவலைபடாதீங்க.. பொங்கலுக்கு மறுநாளும் கிடைக்கும்! தமிழக அரசு உத்தரவு!

 
பொங்கல்

பொங்கல்  பரிசு தொகுப்புகளைப் பெறுவதற்கு வழங்கப்படுகின்ற டோக்கன் சிஸ்டத்தில் பல குளறுபடிகள் நடந்து வருவதாக பொதுமக்கள் அதிருப்தியைத் தெரிவித்தனர். பலருக்கு இன்னும் டோக்கன்கள் கிடைக்கவில்லை. பல இடங்களில் ரேஷன் கடைகளில் இருந்து வீடு வீடாக யாரும் சென்று டோக்கன் வழங்கவில்லை. இந்நிலையில், பொங்கலுக்குள் பரிசு தொகுப்பைப்  பெற்று விட ரேஷன் கடைகளுக்கு பொதுமக்கள் படையெடுக்க துவங்கினார்கள். தற்போது, கவலைப்படாதீங்க. கடைசி தேதின்னு கிடையாது. பொங்கலுக்கு பின்னும் பொங்கல் பரிசு தொகுப்புகளை பெற்றுக் கொள்ளலாம் என்று உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணி தெரிவித்துள்ளார்.

தமிழர்களின் முக்கிய பண்டிகையான பொங்கல் பண்டிகை ஆண்டுதோறும் ஜனவரி மாதத்தில் விமர்சையாக கொண்டாடப்பட்டு வருகிறது. பொங்கல் பண்டிகையை சிறப்பாக கொண்டாட ஒரு கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சர்க்கரை, முழு கரும்பு இவற்றுடன் ரூ.1,000 ரொக்கப் பணம் வழங்கப்படும் என முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்திருந்தார்.

CM-stalin-innagurates-pongal-gift-scheme

அனைத்து அரிசி குடும்ப அட்டைதாரர்கள் மற்றும் இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாம்களில் வசிக்கும் குடும்பத்தினருக்கு இவை வழங்கப்பட உள்ளது. தமிழ்நாட்டில் உள்ள 33 ஆயிரம் ரேஷன் கடைகள் மூலமாக 2.19 கோடி குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்பட உள்ளது.

பொங்கல் தொகுப்பை பெற்றுக் கொள்வதற்கான டோக்கன் கடந்த 3-ம் தேதி முதல் வீடு வீடாகச் சென்று ஊழியர்கள் டோக்கன்களை வழங்குகின்றனர். நாள் ஒன்றுக்கு 200 டோக்கன்கள் வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இன்று (ஜன. 8) வரை டோக்கன் வழங்கப்படும்.

Sakkarapani

இந்நிலையில், வரும் 9ம் தேதி முதல்வர் மு.க.ஸ்டாலின் பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கும் பணியை தொடங்கி வைக்கிறார். அதன்பின் அனைவருக்கும் பொங்கல் தொகுப்பு வரும் 13ம் தேதி வரை கொடுக்கப்பட உள்ளது. இந்த குறிப்பிட்ட தேதிகளில் பொங்கல் பரிசு பெற முடியாதவர்கள், பொங்கல் விடுமுறைக்காக மதுரை, கோவை போன்ற சொந்த ஊருக்கு வெளியூர் சென்றவர்கள் ஜனவரி 16ம் தேதி பெற்றுக் கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! ஒரு முறை ப்ரீமியம் செலுத்தினா போதும்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

சபரிமலை போறீங்களா?! 60 நாட்களுக்கு உணவு, தங்குமிடம் எல்லாமே இங்கே ஃப்ரீ தான்!!

From around the web