அதிர்ஷ்ட லட்சுமிய பெட்ரூமுக்கு இழுத்துட்டு போய் ட்ரெஸ்ஸ கழட்டுங்க.. உதை வாங்கிய பிரபல நடிகர்!

 
தர்ஷன்

அதிர்ஷ்ட லட்சுமிய உங்க வீட்டுக் கதவைத் தட்டும் போதே, இழுத்துக்கிட்டு பெட்ரூமுக்கு போங்க. உடனே துணிகளை எல்லாம் கழற்றி எரிஞ்சு அவளை அம்மணமாக்குங்க. அப்போ தான்  அவ உங்களை விட்டு திரும்ப போக மாட்டாள். நீங்கள் அவளுக்கு மாற்று துணி கொடுத்தாள், உங்களை விட்டு  மீண்டும் கிளம்பி சென்று விடுவாள் என்று வக்கிரமாக ஓர் நேர்காணலில் உளறி கொட்டி, ரசிகர்களிடம் செருப்பால் அடி வாங்கியிருக்கிறார் பிரபல கன்னட நடிகர் தர்ஷன்.

தர்ஷனின் இந்த கருத்துக்கள் கன்னட ரசிகர்களிடையே பெரும் சர்ச்சையை உருவாக்கி இருக்கிறது. பல்வேறு தரப்பினரிடம் இருந்தும் தர்ஷனுக்கு கடும் கண்டனக் குரல்களும்,  எதிர்ப்பும் கிளம்பியது. அவர் மன்னிப்பு கேட்க வேண்டும் என  கோரிக்கைகள் வலுத்தன. இந்நிலையில், அடுத்த மாதம் தர்ஷன் நடிப்பில்  'கிராந்தி' திரைப்படம்  திரையரங்குகளில் வெளியாக தயாராகி வருகிறது. இந்த படத்தின் பாடல் வெளியீட்டு விழாவில் கலந்து கொண்ட தர்ஷன் மீது, ரசிகர்களில்  ஒருவர் செருப்பை வீசியெறிந்தார்.


ரசிகர் வீசி எறிந்த செருப்பு தர்ஷனின் தோள் பட்டையில் பட்டு கீழே விழுந்தது.  தர்ஷனின் சர்ச்சைக் கருத்துகளுக்கு எதிராக ரசிகர்கள் இந்த செயலில் ஈடுபட்டிருக்கலாம் எனத் தெரிய வந்துள்ளது. இந்த சம்பவத்திற்கு எதிராக நடிகர் சிவராஜ்குமார் அவரது ட்விட்டர் பக்கத்தில்  வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், "தர்ஷன் மீது செருப்பு வீசப்பட்ட சம்பவம் எனது மனதிற்கு வேதனை அளிக்கிறது. நடிகர்கள் யாரையும் ரசிகர்கள், அவமரியாதை செய்யக்கூடாது. இத்தகைய செயல்களை ரசிகர்கள் தவிர்க்க வேண்டும் " எனக் கூறியுள்ளார்.

நடிகை ரம்யா , "நடிகர்களின் ரசிகர் மன்றங்கள் ஒழுக்கத்தை கடைப்பிடிக்க வேண்டும். நடிகர்கள் தங்களது ரசிகர்களிடம் மற்ற நடிகர்கள் பற்றி சமூக வலைத்தளங்களில் 'ட்ரோல்' செய்ய வேண்டாம் என கருத்து தெரிவிக்க வேண்டும்’ என்று பதிவிட்டுள்ளார். 

மார்கழி மாத விரத முறைகள், வழிபாடு, பலன்கள்!

அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

சபரிமலை போறீங்களா?! 60 நாட்களுக்கு உணவு, தங்குமிடம் எல்லாமே இங்கே ஃப்ரீ தான்!!

From around the web