வாகன ஓட்டிகளே உஷார்!! இந்த பகுதிகளில் போக்குவரத்து மாற்றம்!!

 
போக்குவரத்து மாற்றம்

சென்னையில் பல்வேறு பகுதிகளில் மெட்ரோ ரயில் விரிவாக்க பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதனால் சாலைகளில் செல்லும் வாகன ஓட்டிகள் மிகுந்த சிரமங்களை சந்தித்து வருகின்றனர். இவர்களை கருத்தில் கொண்டும், மெட்ரோ ரயில் திட்ட பணிகளை விரைந்து முடிக்கவும் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக போக்குவரத்து காவல்துறை தெரிவித்துள்ளது. இது குறித்து வெளியிட்ட செய்திக்குறிப்பில் இன்று முதல்  பூந்தமல்லி டிரங்க் சாலையில் போரூர் முதல் பூந்தமல்லி பைபாஸ் வரை  தற்காலிக போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

போக்குவரத்து போலீஸ்

இந்த மாற்றம் இன்று நவம்பர் 23 முதல்  பிப்ரவரி 11,2023 வரை 24 மணி நேரமும் அமலில் இருகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.  சென்னை பெங்களூர் நெடுஞ்சாலையில், ஸ்ரீபெரும்புதூர் பக்கம் இருந்து சென்னை நோக்கி வரும் வாகனங்களில், பூந்தமல்லிக்கு முன்பாக, சென்னை வெளிவட்ட சாலை வழியாக இடதுபுறம் திரும்பி மீஞ்சூர் நோக்கி செல்லும் வாகனங்கள், வழக்கமாக சென்னை வெளிவட்ட சாலையின் சர்வீஸ் ரோட்டில் இடதுபுறம் திரும்பி செல்ல அறிவுறுத்தப்பட்டுள்ளது.  


சென்னை வெளிவட்ட சாலையில் வண்டலூர் பக்கமிருந்து வரும் அனைத்து வாகனங்களும் தற்போது பூந்தமல்லி நசரத்பேட்டை அருகில் இடதுபுறம் திரும்பி, சென்னை பெங்களூர் நெடுஞ்சாலையை அடைந்து பூந்தமல்லி நோக்கி செல்ல வேண்டும். பூந்தமல்லி நசரத்பேட்டை அருகில் சென்னை வெளி வட்ட சாலை பாலத்தில் இருந்து இடது புறம் திரும்பாமல், சென்னை வெளிவட்ட சாலையிலேயே நேராக சென்று கோலப் பஞ்சேரி சுங்கசாவடிக்கு முன்பு வலது புற 'யு'வடிவில் திரும்பி, சென்னை வெளி வட்ட சாலையிலேயே பூந்தமல்லி பைபாஸ் பகுதி வரை வந்து, பின்னர் பெங்களூர் சென்னை நெடுஞ்சாலையினை அடையலாம். 

போக்குவரத்து மாற்றம்
மெட்ரோ ரயில் பணிகள் முடிக்கப்படும் வரை பொதுமக்கள் இந்த போக்குவரத்து மாற்றத்திற்கு முழு ஒத்துழைப்பு வழங்கும்படி  கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். அவசர தொலைபேசி எண்களும் அறிவிக்கப்பட்டுள்ளன. அம்பத்தூர் போக்கு வரத்துகாவல் உதவி ஆணையாளர் கைபேசி எண் 9444212244  தொடர்புகொள்ளலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. காவல் ஆய்வாளர், T12 பூந்தமல்லி போக்குவரத்து அலைபேசி எண் 9600009159 தொடர்பு கொள்ளலாம். ஆவடி கட்டுப்பாட்டு அறை எண்: 7305715666 ல்  தொடர்பு கொள்ளலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சபரிமலை போறீங்களா?! 60 நாட்களுக்கு உணவு, தங்குமிடம் எல்லாமே இங்கே ஃப்ரீ தான்!!

அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

மப்பேறி தள்ளாடும் நாய்!! மதுவை குடித்ததால் பரிதாபம்!!

From around the web