ஈ.வி.கே.எஸ். பின்னாடி அவர் கட்சியின் மாவட்ட தலைவரே நிற்பாரா தெரியாது! பாஜக அண்ணாமலை பேட்டி!

 
அண்ணாமலை

ஈரோடு கிழக்கு தொகுதியின் இடைத்தேர்தல் சூடு பிடிக்க துவங்கியுள்ளது. காங்கிரஸ் கட்சியில் சார்பில் ஈ.வி.கே.எஸ் இளங்கோவன் வேட்பாளராக அறிவிக்கப்பட்டது குறித்து இன்று திருச்சி விமான நிலையத்திற்கு வந்த பா.ஜ.க மாநில தலைவர் அண்ணாமலையிடம் செய்தியாளர்கள் சந்திப்பின் போது, ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் பின்னால் அவர் கட்சியின் மாவட்ட தலைவரே நிற்பாரா என்பது சந்தேகம் தான் என்றார். மேலும், ஈரோடு கிழக்கு தொகுதியில் பலம் வாய்ந்த வேட்பாளர் எங்கள் கூட்டணி சார்பில் போட்டியிட வேண்டும். எங்கள் கூட்டணியில் பலம் வாய்ந்த கட்சி அ.தி.மு.க தான் என்று பேட்டியளித்தார்.

ஈவிகேஎஸ் இளங்கோவன்

கூட்டணிக்கு மரபு, தர்மம் உள்ளது. இடைதேர்தல்கள் கட்சியின் பலத்தை தீர்மானிப்பதற்கானது அல்ல. தி.மு.க கூட்டணியை எதிர்த்து நிற்க கூடிய கட்சி பலம் வாந்த கட்சியாக மக்கள் ஆதரவுள்ள கட்சியாக இருக்க வேண்டும். எங்கள் கூட்டணியில் பலம் வாய்ந்த கட்சி, பெரிய கட்சி அ.தி.மு.க தான். இடைத்தேர்தலில் பணம் அதிகம் செலவு செய்வார்கள்.

தி.மு.க தேர்தல் குழுவில் பல அமைச்சர்கள் இருக்கிறார்கள். அதிலேயே பணம் எந்தளவிற்கு செலவு செய்யப்படும் என்பது தெரிகிறது. எனவே இவைற்றையெல்லாம் எதிர்த்து களம் காண பலம் வாய்ந்தவர்  வேட்பாளராக இருக்க வேண்டும். எந்த வித குழப்பமும் இல்லை எங்கள் கூட்டணியில் பெரிய கட்சி அ.தி.மு.க ஈரோடு கிழக்கு தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்று ஏற்கனவே அமைச்சரான பலர் அந்த கட்சியில் இருக்கிறார்கள்.

பாஜக அதிமுக ஓபிஎஸ் ஈபிஎஸ்

பண பலம், படை பலம், அதிகார பலத்தை எதிர்த்து நிற்க கூடிய வேட்பாளர் நிற்க வேண்டும்.  நிற்க கூடிய வேட்பாளருக்கு எல்லா விதமான ஒத்துழைப்பும் வழங்க வேண்டியது எங்கள் கடமை. பொது வேட்பாளரை நிறுத்த வேண்டியதில்லை. அ.தி.மு.க வில் பலம் வாய்ந்த தலைவர்கள் இருக்கிறார்கள். ஈரோட்டில் நின்று வெற்றி பெற்றவர்களும் இருக்கிறார்கள் என்றார்.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

2023 இந்த 6 ராசிகளுக்கு அதிர்ஷ்டம் அலைமோதும்! பயன்படுத்திக்கோங்க

From around the web