கல்வி உதவித் தொகை நிறுத்தம்!! கேள்விக்குறியாகும் மாணவர்களின் எதிர்காலம்!!

 
மாணவர்கள்

2006ல் 1 ம் வகுப்பு முதல் 10ம் வகுப்பு வரை பயிலும் சிறுபான்மை மாணவர்களுக்கு  இலவச மெட்ரிக் கல்வி உதவித் தொகை திட்டம் செயல்படுத்தப்பட்டது. இத்திட்டத்தின் படி இந்தியா முழுவதும்  அரசுசிறுபான்மையினர்  பள்ளி விடுதிகளில் தங்கி கல்வி பயிலும் அனைத்து மாணவர்களுக்கும் அட்மிஷன், டியூசன் கட்டணம், பராமரிப்பு கட்டணம் என கல்வி உதவித் தொகை வழங்கப்பட்டு வந்தது. இத்திட்டத்தில் மிகவும் பின் தங்கிய நிலையில் இருந்து வரும் சிறுபான்மை மாணவர்கள் இந்த உதவித்தொகை மூலம் தடையின்றி விரும்பிய கல்வியை தடையின்றி பெற்று வந்தனர்.

கல்வி உதவிதொகை

இந்த ஆண்டு கல்வி உதவித் தொகை பெறுவதற்கு லட்சக்கணக்கான சிறுபான்மை மாணவர்கள் விண்ணப்பித்தனர். ஆண்டு வருமானம் 1 லட்சம் ரூபாய்க்கு கீழ் உள்ள குடும்பங்களைச் சேர்ந்த 1 முதல் 10-ம் வகுப்பு வரையிலான சிறுபான்மை மாணவர்களுக்கு வழங்கப்பட்டு வந்த இலவச  மெட்ரிக் கல்வி உதவித்தொகை நிறுத்தப்படும் என  மத்திய அரசு அறிவித்துள்ளது. இந்த உதவித்தொகை இனிவரும் காலங்களில்  9 மற்றும் 10ம் வகுப்பு மாணவர்களுக்கு மட்டுமே தொடர்ந்து வழங்கப்படும் எனவும் அறிவித்துள்ளது. 

ஆசிரியர்கள்
இது குறித்து வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்  அனைவருக்கும் கல்வி உரிமைச் சட்டத்தின் கீழ் ஏற்கனவே 1 முதல் 8ம் வகுப்பு வரை மாணவர்களுக்கு இலவச கல்வி வழங்கப்பட்டு வருகிறது. மத்திய சமூகநல மற்றும் பழங்குடியின மேம்பாட்டு அமைச்சகத்தின் சார்பில் 9 மற்றும் 10 ம் வகுப்பு மாணவர்களுக்கு மட்டுமே கல்வி உதவித்தொகை வழங்கப்படும் எனத் தகவல்கள் வெளியாகியுள்ளன.  இதன் அடிப்படையில்  சிறுபான்மை மாணவர்களுக்கும் அதே முறையைப் பின்பற்ற முடிவெடுக்கப்பட்டு உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சபரிமலை போறீங்களா?! 60 நாட்களுக்கு உணவு, தங்குமிடம் எல்லாமே இங்கே ஃப்ரீ தான்!!

அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

மப்பேறி தள்ளாடும் நாய்!! மதுவை குடித்ததால் பரிதாபம்!!

From around the web