ட்விட்டரில் ஸ்வைப் ?! லேட்டஸ்ட் அப்டேட்!! பயனர்கள் உற்சாகம்!!

 
Elon Musk

ட்விட்டரில் ஸ்வைப் செய்யும் வசதி விரைவில் வரவுள்ளதாக எலான் மஸ்க் அறிவித்துள்ளார். கடந்த சில மாதங்களுக்கு முன்பாக பல ஆயிரம் கோடி ரூபாய் வங்கியில் கடன் பெற்று ட்விட்டரை வாங்கியுள்ளார் எலான் மஸ்க். ட்விட்டரை கைப்பற்றி பிறகு பல அதிரடி மாற்றங்களை செய்துள்ளார். அதில் குறிப்பாக பல ஆண்டுகளாக பயன்படுத்தாமல் இருக்கும் ட்விட்டர் கணக்குகளையும் மற்றும் போலியான கணக்குகளைக் கண்டறிந்து நீக்க உள்ளதாக அறிவித்தார்.

twitter

அதன்படி 1.5 பில்லியன் பயனர் கணக்குகளை நீக்கம் செய்ய உள்ளதாக எலான் மஸ்க் ட்வீட் செய்துள்ளார். மேலும் ட்விட்டரில் பயனாளர்களின் தேவையை பூர்த்தி செய்யும் விதமாக புதிய அப்டேட்களை இந்நிறுவனம் அறிமுகப்படுத்தி வருகிறது. அந்த வகையில் வருகிற ஜனவரி முதல் ட்விட்டரில் Gesture navigation அம்சத்தை கொண்டு வர இருப்பதாக எலான் மஸ்க் ட்வீட் செய்துள்ளார்.

இது தொடர்பாக எலான் மஸ்க் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில் கூறியிருப்பதாவது, ‘இந்த ஜனவரி மாதத்தில் ஸ்வைப் ஆப்ஷன் கொண்டு வரப்படும். இதன் மூலம் recommended & followed tweets, trends, topics போன்றவற்றை ஸ்வைப் செய்து பார்த்துக்கொள்ளலாம். இதே போல் ஷேர் பட்டனில் புக்மார்க் வசதி கொண்டு வரப்படும். பயனர்கள் தங்களது புக் மார்க செய்யப்பட்ட ட்வீட்களைப் படித்துக்கொள்ளலாம்’ இவ்வாறு தெரிவித்துள்ளார்.


ஏற்கெனவே தற்போது உலகளவில் ட்வீட்களுக்கான வியூ கவுண்ட் அம்சத்தை வெளியிட்டது, பெரும்பாலான பயனர்கள் லைக். ரீட்வீட் ஏதும் செய்யாமல் வெறும் ட்வீட்டைப் படித்துவிட்டு செல்கின்றனர். அவ்வாறு எத்தனை பேர் ட்வீட்களை படிக்கின்றனர் என்பது குறித்து அறிவதற்காக இந்த View Count என்ற அம்சம் கொண்டு வரப்பட்டது.

மார்கழி மாத விரத முறைகள், வழிபாடு, பலன்கள்!

அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

சபரிமலை போறீங்களா?! 60 நாட்களுக்கு உணவு, தங்குமிடம் எல்லாமே இங்கே ஃப்ரீ தான்!!

 

From around the web