ஊழியர்களே உஷார்!! ரேஷன் கடைகளுக்கு பறந்த உத்தரவு!!

 
ரேஷன் விரல் பதிவு கைரேகை

தமிழகத்தில் துறை வாரியாக அதிரடி மாற்றங்கள் செய்யப்பட்டு வருகின்றன. ரேஷனில் பொருட்கள் வாங்குபவர்களின் வசதிகளின் அடிப்படையிலும் தொழில் நுட்ப அடிப்படையில் மேம்படுத்தும் வகையிலும் இந்த மாற்றங்கள் நிகழ்த்தப்பட்டு வருகின்றன.  ரேஷன் பொருட்களை வாங்கியவர்களுக்கு எஸ். எம். எஸ் மூலமாக அவர்கள் இணைத்து இருக்கும் போன் எண்ணுக்கு என்னென்ன பொருட்கள் வாங்கப்பட்டது என்று உறுதி செய்வதற்காக பில் அனுப்பப்படும்.ரேஷன் பொருட்கள் திருடு போவதை தடுக்க தான் இந்த  நடவடிக்கை . ரேஷனில் வாங்காத பொருட்கள் அதில் இருந்தால் நீங்கள் புகார் கொடுக்க முடியும்.

ரேஷன்

திருட்டு அதாவது நீங்கள் அரிசி, பருப்பு வாங்காத பட்சத்தில் அந்த பொருட்கள் பற்றி புகார் கொடுக்கலாம். ரேஷன் பொருட்கள் வெளிமார்க்கெட்டுகளுக்கு  கடத்தப்படுவதை தடுக்கும் விதமாக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது. தமிழகத்தின் அண்டை மாநிலமான கேரளாவில் இது போல தமிழக அரிசி அதிக அளவில் விற்பனை செய்யப்படுகிறது. இதனை தவிர்க்க  க்யூஆர் கோடு வசதியை அறிமுகப்படுத்த அரசு முடிவு செய்துள்ளது. இதன்படி ரேஷன்கடைகளில் வாங்கும்  அரிசி மூட்டைகள், சர்க்கரை மூட்டைகள், பருப்பு பாக்கெட்டுகள் அனைத்திலும் தமிழக அரசின் முத்திரை இடம்பெறும். அதற்கு மேலே க்யூ ஆர் கோடு இடம்பெறும். இந்த க்யூ ஆர் கோடு உள்ள மூட்டைகளை யாரும் வாங்க கூடாது என்று உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

அதே போல்  ரேஷன் கடைகளில் தற்போது கணினி மூலம் பொருட்கள் இருப்பு குறித்து அறிந்து கொள்ளும் வசதி ஏற்படுத்தப்பட்டு இருக்கிறது. போலி பில் போடும் ரேஷன் விற்பனையாளர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என கூட்டுறவுத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.  இது குறித்து அவ்வப்போது மண்டல அதிகாரிகள் ஆய்வு செய்து  கண்காணித்து உறுதி செய்ய வேண்டும் எனவும்  உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. முக்கியமாக கேரளா, ஆந்திராவில் அதிக விலைக்கு இந்த பொருட்களை விற்பனை செய்யும் வழக்கம் அதிகரித்து வருகிறது. புதிய திட்டத்தின்படி மக்கள் லேசர் கருவிகள் மூலம்  கண் கருவிழி பதிவுகள் செய்யப்படும் இதன் மூலம் ரேஷன் கடையில் மக்கள் பொருட்களை வாங்க முடியும். இதன் காரணமாக ரேஷன் கடைகளில் பொருட்கள் திருடப்படுவது தடுக்கப்படும். மிக விரைவில் தமிழகம்  முழுவதும்  இந்த திட்டம் கொண்டு வரப்பட உள்ளது.

கருவிழி மூலம் ரேஷன் பொருட்கள்

ஆனால்,  ஒரு சிலருக்கு ரேஷன் பொருட்கள் வாங்காமலே வாங்கியதாக குறுஞ்செய்திகள் அனுப்பி வைக்கப்படுவதாக தொடர்ந்து புகார்களும், குற்றசாட்டுக்களும் எழுந்து வருகின்றன. இந்த புகார்கள்  நிரூபிக்கப்பட்டால் ரேஷன் கடை ஊழியர்கள்  மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என கூட்டுறவு துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.

சபரிமலை போறீங்களா?! 60 நாட்களுக்கு உணவு, தங்குமிடம் எல்லாமே இங்கே ஃப்ரீ தான்!!

அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

மப்பேறி தள்ளாடும் நாய்!! மதுவை குடித்ததால் பரிதாபம்!!

From around the web